Life

Life

திருமணத்திற்கு பிறகு
#வேலை வேண்டாம் என்றார்
#விட்டுவிட்டேன்!

#நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
#மாற்றிவிட்டேன்!

#Facebook கூடாதென்றார்
#நிறுத்தி விட்டேன்!

#ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
#விட்டுவிட்டேன்!

#லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
#சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!

#Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர #ஒதுக்கினேன்!

#ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
#கழுத்துவரை மறைத்து
தைத்துக்கொண்டேன்!

#உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல்
#விட்டுவிட்டேன்!

#பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
#பாலாடை தயிரோடு
நிறுத்திக்கொண்டேன்!

கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
அதுவரை தவறாமல் மாதந்தோறும்
#மாத்திரை தின்றேன்!

வாரத்தின் ஏழுநாளும்
அவருக்கு பிடித்ததே
#சமைக்க வேண்டும்!

வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று #நடுராத்திரி தான்
திரும்புவார்!
இரவு ஒரு மணிக்கு
Reached ? என்று
பெண் பெயரில் மெசேஜ்!
பொழுது விடிந்ததும்
யாரென்று கேட்டேன்,
Ex lover என்றார்!
விட்டுவிடச் சொன்னேன்,
முடியவில்லை என்றார்!
முயன்றால் முடியும்
#துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்!
நீயும் அவளும் ஒன்றா என்றார்,
வேறு வேறு தான்,
இது legal அது illegal என்றேன்!
#அறைந்து விட்டார்!
#தூக்கம் போனது!

உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்!
முடியாது it's true love
என்றார்!
எனக்கும் கூட true love
இருந்தது என்றேன்!
மறைத்ததற்காக ஒரு வாரம்
#அடித்தார்!
தாங்கிக்கொண்டேன்!

ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை!

திரும்பவும் #Facebook
open செய்தேன்!
திரும்பவும் #lipstick போட்டேன்!
திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
#ஜன்னல் வைத்தேன்!
திரும்பவும் #லெக்கின் போட்டேன்!
#பார்லர் பக்கம்
தலைவைத்து படுத்தேன்!
எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்!
முகநூல் முழுவதும்
காதல் கவிதைகளாய்
எழுதினேன்!
திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்!
ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது weekend party என்று
வெளியே சென்றேன்!
ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் laptop க்கும்
Password போட்டேன்!

அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது!

தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை!
எப்படியாவது என் ex lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்!

எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!
இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்!
அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு ex lover வேண்டும்!
நீ யாரென்றே தெரியாது
என் அன்பு காதலனே,
But I love you darling!!


Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send