Motivational
வாழ்க்கையில் நான் உணர்ந்த 15 வாழ்க்கைப் பாடங்கள்!
வாழ்க்கை எனும் பயணத்தில் நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம், அனுபவிக்கிறோம். சில நேரங்களில் நாம் தடுமாறுகிறோம், சில நேரங்களில் உற்சாகமாக முன்னேறுகிறோம். நான் என் வாழ்க்கையில் கற்ற சில முக்கியமான பாடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவை எனக்கு உதவியது போல உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்.
1. தனிமை ஒரு வலிமை; உனக்கு நீயே முதல்ல தேவைன்னு அது உனக்குப் புரிய வைக்கும். (Being alone is powerful; it helps you realize you need yourself more.)
2. உன்னை நீயே நல்லா தெரிஞ்சுக்கிட்டா, அடுத்தவங்க அங்கீகாரம் உனக்கு பெருசா தேவைப்படாது. (The more you know yourself, the less you need approval from others.)
3. நீ தனியா இருக்குறதுக்கு கம்பர்ட்டபிளா இல்லன்னா, நீ ஒருத்தரோட இருக்கிறது அன்புனாலயா, இல்ல தனிமை பயத்துனாலயானு உனக்கே தெரியாது. (Until you’re comfortable being alone, you won’t know if you're with someone out of love or loneliness.)
4. மனசு அமைதியா இருக்கும்போது பயம் உருவாகும்; ஆனா செயல் செஞ்சா அந்த பயம் போயிடும். (We create fears when we sit still; we overcome them by taking action.)
5. உன் பயத்தை நேருக்கு நேரா பாரு; இல்லன்னா அது உன்னை தோற்கடிச்சிடும். (Face your fears, or they will defeat you.)
6. தப்பான முடிவு எடுக்கணும்னு நினைச்சா, எல்லார்கிட்டயும் போய் கேளு. (If you want to make the wrong decision, ask everyone.)
7. வளர்ச்சி உனக்கு கஷ்டமான இடத்துல தான் நடக்கும். (Growth happens outside your comfort zone.)
8. நீ எதை பத்தி யோசிக்கிறியோ, அதையே நீ வாழ்க்கையில கொண்டு வருவ. (What you think about, you bring about.)
9. செயல் பயத்தை ஜெயிக்கும்; தயக்கம் அதை உயிரோட வெச்சிருக்கும். (Action conquers fear; hesitation keeps it alive.)
10. உனக்கு நீயே மரியாதை கொடுத்தா தான், அடுத்தவங்க உனக்கு மரியாதை கொடுப்பாங்க. (Self-respect earns respect from others.)
11. நீ உன்னை மாத்திக்காம, உன்னை சுத்தி இருக்கிறத மாத்த முடியாது. (You can’t change your surroundings until you change yourself.)
12. சின்ன அடி எடுத்து வெச்சா கூட, அது உன் வாழ்க்கையில பெரிய மாற்றத்த கொண்டு வரும். (Small steps in the right direction can lead to the biggest changes in your life.)
13. உன் மன அலைவரிசைக்கு ஏத்த மாதிரி தான், உனக்கான ஆட்கள் உன்னை தேடி வருவாங்க. (Your vibe attracts your tribe.)
14. சில சமயம் நல்ல விஷயங்கள் உடைஞ்சு போனா தான், அதைவிட நல்ல விஷயங்கள் ஒண்ணா சேரும். (Sometimes, good things fall apart so better things can come together.)
15. பொறுமைன்னா வெறுமனே காத்து இருக்கிறது இல்ல; காத்து இருக்கும் போது நீ எப்படி நடந்துக்கிறன்றதுல இருக்கு. (Patience is not just waiting, but how you act while waiting.)
இந்தப் பொன்மொழிகள் அனைத்தும் நான் அனுபவத்தில் உணர்ந்தவை. இவை உங்களுக்கு ஒரு சிறிய உந்துதலை கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எதிர்கொள்ளுங்கள்.
#life , #data, #update, #motivational, #true, #help, #motives, #share
#life , #data, #update, #motivational, #true, #help, #motives, #share
Comments