ME

ME

நான்... நான்... நான்...

நான் சம்பாதித்தேன்,

நான் காப்பாற்றினேன்,

நான் தான் வீடு கட்டினேன்,

நான் தான் உதவி  செய்தேன்,

நான் உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!!

நான் பெரியவன்,

நான் தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

நான் தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

நான் தான்  காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா ?

நான் தான் கடலில்  மீன்  பிடிக்கிறவனுடைய வலையில்  மீனை சிக்க  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா? 

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.
 உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.

உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.

எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது

தாய் தந்தைக்கு..நல்ல பிள்ளை யாக,கணவனுக்கு நல்ல மனைவியாக,மனைவி க்கு நல்லகணவனாக,பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக,வியாபார த்தில் நேர்மையாக...இதையெல்லாம் சரியான முறையில் செய்து... நம்மை படைத்த இறைவனை... எப்படி திருப்திப்படுத்துவது என்பது பற்றி மட்டும் கவலைப்படு...

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send