Finger Exercises

Finger Exercises

Finger Exercises
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் 

கட்டை விரல்;
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்;
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

நடுவிரல்;
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோதிரவிரல்;
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

சிறுவிரல்;
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

உள்ளங்கை;
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒரு கையில் மற்றொரு கையின் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரல் எனும் பெருவிரல் வைத்து அழுத்தம் கொடுத்தால் நலமே

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send