Tamil

Tamil

எம் தமிழே எமக்கு இனிமை

வட நாடும் எங்கள் நாடே
வட நாட்டவரும் எம் சகோதரரே
அவர் படித்த மொழி இந்தி
அவர் பேசும் மொழி இந்தி
படை படையாய் வேலை தேடி
பல்லாயிரமவர் வருகின்றார் தமிழகம் நோக்கி

இந்தி படிக்கத் தெரிந்ததால்
இயல்பாக இந்தி பேசத் தெரிந்ததால்
வேலை இல்லை வடநாட்டில்
வேலை கிடைக்கும்  - தமிழ் நாட்டில்

தமிழகத்து மாந்தரை இந்தி படிக்க வற்புறுத்தல்
தரம் கெட்ட மொழித் திணிப்பே
தமிழ் படிக்க வசதியின்றி
தடுமாறும் மக்களுண்டு இவ்வூரில்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின்
முன் தோன்றி வளர்ந்த எம் தமிழை
உயிர் அறுக்கும் முயற்சியை
சிரம் கொடுத்து காத்தெடுப்போம்

வங்கத்து மொழிக் கவிஞன் தாகூரும்
கீதாஞ்சலியை வங்கத்திலெழுதி பின்னர்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான்
பாராட்டுப் பெற்றான் - பரிசும் பெற்றான்

அவரவர் தாய் அவரவருக்கு பெருமையாகும்
அவரவர் மொழியும் மிகப் பெருமை தாய் போல

தாயும் மொழியும் ஒன்றென்று அறிக - மாற்றான்
தாய் இந்தி வேண்டாமென்று எறிக
-
ஜெய் ஹிந்த்

#tamil

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send