CEO of SpaceX

CEO of SpaceX


எலான் மஸ்க் என்னும் மாமனிதன் 

விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. 1971இல் தென் ஆப்பரிக்காவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான் மஸ்க், 18 வயதில் கனாவிற்கு புலம் பெயர்ந்து, பின்னர் அமெரிக்காவிற்கு மாறினார். அங்கு கல்லூரி படிப்பை முடித்த பின், 1995இல் Zip2 என்ற இணைய தள ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, ஒரு சிறிய அலுவலகத்தில் தொடங்கி வெறியுடன் உழைத்து, வெற்றி பெறச் செய்தார். அந்த நாட்களில் வீடு எடுக்க போதிய வருமானம் இல்லாததால், அலுலவலத்திலேயே தங்கிக் கொண்டார். 1999இல் இந்நிறுவனத்தை காம்பேக் நிறுவனம் வாங்கிய போது அவருக்கு 22 மில்லியன் டாலர்கள் கிடைத்தது. அதன் பிறகு எக்ஸ்.காம் நிறுவனத்தை தொடங்கி பெரிய அளவில் வளர்ந்தார். இதில் ஈட்டிய பெரும் தொகையை கொண்டு 2002இல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி இன்று பெரும் சாதனை படைக்கும் நிறுவனமாக வளர்த்தெடுத்துள்ளார். 2003இல் டெஸ்லா என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தில் முதலீடு செய்து, இன்று உலகின் மிகப் பெரும் கார் தயாரிப்பு நிறுவனமாக
அதை வளர்த்தெடுத்தார். அமெரிக்க அரசின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இணையாக, போட்டியாக அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வளர்ந்து வருகிறது. எலான் மஸ்க் என்ற தனி மனிதனின் அசுர சாதனை இது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த மனிதன், சொந்த முயற்சியினாலும், தனது அபாரமான திறமை மற்றும் அறிவாற்றலினாலும், விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் பெரும் நிறுவனத்தை கட்டி எழுப்பியுள்ள சாதனையை அமெரிக்காவில் உள்ள சுதந்திர சந்தை அமைப்பு சாத்தியாமாக்கியுள்ளது. முதலாளித்துவத்தின் சாதனை இது. ’இது சாத்தியமில்லை, முடியாது’ என்று சொல்வது அவருக்கு பிடிக்காத வாக்கியம். Longtime SpaceX President Gwynne Shotwell has learned that the word “impossible” is not part of Musk’s vocabulary. “Elon has this incredible optimism, where he will pierce through these imagined constraints and show you that really a lot more is possible that you really think is today,”

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send