kannadasan sir

kannadasan sir

கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் : 

ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? 

எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்,' என்று கேட்டாராம். 
அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.

அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.

'கேள்வி தொடர்ந்தது. உன் மனைவிக்கு.?' 
'கணவன்'.!
'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
'அண்ணன் குழந்தைகளுக்கு.?'
'சித்தப்பா.!'
விடவில்லை, கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது.

பெரியப்பா, மைத்துனர், மாமன், மச்சான்
என பல உறவுகளில் பதில் வந்து கொண்டே இருந்தது.

வெறும் மண்ணை தின்னப் போகும் உன் சடலத்திற்க்கே இத்தனை பெயர் வைத்து அழைக்கும் போது,

"யாதுமாகி நின்று, எங்கெங்கும் நின்று உலகையே கட்டிக் காக்கும் என் அப்பன் பரம் பொருளை எத்தனை பெயர்களால் அழைத்தால் என்ன..?? 

அவன் எதற்குள்ளும் அடங்காதவன், எதற்குள்ளும் இருப்பவன். உன்னுள்ளும் இருப்பவன், என்னுள்ளும் இருப்பவன். உன்னை அழைத்தாலும் அவனே, என்னை அழைத்தாலும் அவனே."

என முத்தாய்ப்பாக முடித்தார்...

#kannadasan (கன்னடசன் ஒரு இந்திய தத்துவஞானி, கவிஞர், திரைப்பட பாடல் பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், ஆசிரியர், பரோபகாரர், மற்றும் இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மிக முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார்.)

#kannadasan, #கவிஞர், 

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send