Life

Life

நான்
இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்...!!

அம்மா அப்பா
என்னை
கடைசியாக
மடியில்
வைத்துக்கொள்ள
நினைக்கலாம்..!!!

அக்கா தங்கை
என் கை
பிடித்து அழ
நினைக்கலாம்..!!

துனைவியாரோ
கடைசி
நிமிடத்திலாவது
அருகில் இருக்க
நினைக்கலாம்..!!

பெற்ற குழந்தை
என்னை
தட்டி எழப்ப
நினைக்கலாம்..!!

தொலைந்த
தோழியொருத்தி
கடைசியாய் என் கரம்
கோர்க்க வரலாம்..!!

கூட பழகிய
நண்பர்கள்
கடைசியாய்
கட்டித்தழுவி கதறி
அழுதிட விரும்பலாம்..!!

அன்பைக்
காட்டத் தெரியாத
நான் விரும்பியோர்
கடைசியாய்
என் தலைகோத
ஆசைப்படலாம்..!!

உறவற்ற
பெயரற்ற
செய் நன்றி மறவா யாரோ
கடைசியாய் என் பாதம்
தொட விரும்பலாம்..!!

உயிரற்று
போனால்தானென்ன..?

கடைசியாய் எனக்கும்
தேவையாய் சில
வருடல்கள்
இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்...!!

எல்லாம் அந்த ஒரே ஒரு
நாள் மட்டுமே..!!
கண்ணீருடன்....

யாரோ எழுதிய கவிதை....இதில் உள்ளவை அத்தனையும் நிதர்சனமான உண்மை...!!

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send