Money
🌀பணமே🌀
💢உனக்குத்தான் எத்தனை பெயர்கள்?
💢கோவில்களில் *காணிக்கை* என்றும்,
💢கல்விக் கூடங்களிலோ *கட்டணம்* என்றும்,
💢திருமணத்தில் *வரதட்சணை* என்றும்,
💢திருமண விலக்கில் *ஜீவனாம்சம்* என்றும்,
💢விபத்துகளில் இறந்தால், *நஷ்டஈடு* என்றும்,
💢ஏழைக்குக் கொடுத்தால், *தர்மம்* என்றும்,
💢திருமண வீடுகளில் *மொய்* என்றும்,
💢திருப்பித்தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால், அது *கடன்* என்றும்,
💢விரும்பிக் கொடுத்தால் *நன்கொடை* என்றும்,
💢நீதிமன்றத்தில் செலுத்தினால் *அபராதம்* என்றும்,
💢அரசுக்குச் செலுத்தினால் *வரி* என்றும்,
💢செய்த வேலைக்கு, மாதந்தோறும் கிடைப்பது *சம்பளம்* என்றும்,
💢தினமும் கிடைப்பது *கூலி* எனவும்,
💢பணி ஓய்வு பெற்றால் கிடப்பது *பணிக்கொடை* [அ] *பென்ஷன்* எனவும்,
💢சட்டத்திற்கு விரோதமாக வாங்குவது *லஞ்சம்* எனவும்,
💢வாங்கிய கடனுக்குக் கொடுக்கும்போது *வட்டி* எனவும்,
💢குருவிற்குக் கொடுக்கும் போது *தட்சணை* எனவும்,
💢ஹோட்டலில் நல்குவது *டிப்ஸ்* எனவும்,
💢பதுக்கி வைத்தால்
*கறுப்பு பணம்* எனவும்,
இவ்வாறு பல பெயர்களில் குழப்பங்களை உண்டாக்கும் வேறொன்றானது, இப்பூமியில் உண்டா ?
Indian Rupee, #Indian_Rupee, #Rupee, #பணம்
Super
ReplyDelete