Husband and wife relationship

Husband and wife relationship

கேள்வி:

கணவன் மனைவி உறவு சிக்கலில்லாமல்.. வலுப் பெற்று திகழ என்ன செய்ய வேண்டும்?......

...சகோதரி ஒருவரின் கேள்வி இது.

பதில்:

தங்களின் கேள்விக்கு நன்றிகள்.

#புரிந்துகொள்ளுதல் மற்றும் அனுசரித்தல் (Understanding and adjustment)
இந்த இரண்டு மட்டும் போதும் வாழ்க்கை சிக்கலில்லாமல் கணவன்-மனைவி உறவு சிறக்கும்.

"பிரச்சனைகள், சிக்கல்கள் வரும்போது யார் விட்டுக் கொடுக்க வேண்டும்?"... என்று வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் ஒரு இல்லத்தரசி
கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகரிஷி நகைச்சுவையாக, "யார் அறிவுடையவரோ, அவர் விட்டுக் கொடுக்கலாம்"..
என்று சொன்னார்.

...

கணவன் மனைவி உறவில் பிரச்சனை வர காரணம் என்ன என்ற
கேள்விக்கு, எழுத்தாளர் இராஜேஷ்குமார்
அவர்கள்....சொல்வது...இதைத்த்தான்👇👇👇

"இருவருமே சத்தம் போட்டு பேசுவதுதான்.
குரல் உயர உயர குறுக்கே ஒரு சுவர் வேக வேகமாய் 
கட்டப்படுகிறது. 
 
அநேக பிரச்சனைகளுக்கு காரணமே, விஷயத்தை 
சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாதம் செய்வதும்,
தெரியாததை தெரிந்தது போல் பேசுவதுதான்.

இன்றைக்கு 
இதைப் பற்றி பேசினால் பிரச்சனை வரும் என்று தெரிந்தால் அதைப் பற்றி 
பேசாமாலேயே இருந்து விடுவதுதான் உத்தமம்.
பேசித்தான்ஆகவேண்டுமென்றால் இடம், பொருள், ஏவல் 
அறிந்து பேச்சை ஆரம்பியுங்கள். 

கணவனின் சொந்தங்களை மனைவியோ, 
மனைவியின் சொந்தங்களை கணவனோ
விமர்சிப்பதை தவிர்த்தாலே போதும். 
வீட்டில் எப்போதும் தென்றல்தான்."என்கிறார்.

என்னைப்பொறுத்தவரை கணவன்-மனைவி உறவு வலுப்பெற இது ஒன்று இருந்தால் போதும்.

அது, வெளிப்படைத்தன்மை அதாவது ஆங்கிலத்தில் சொல்லும்Transparent....

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத தன்மை இருந்தால் மட்டுமே போதும் அற்புதமான உறவாக கணவன் மனைவி உறவு இருக்கும்.

உலகிலேயே மிகச் சிறந்த நட்பு, கணவன் மனைவி உறவு தான்... (உபயம்:வேதாத்திரி மகரிஷி) என்பதை இருவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கணவனிடம் இதை மறைக்க வேண்டும்..
 மனைவியிடம் இதை மறைக்க வேண்டும் ...என்று எப்பொழுது எண்ண ஆரம்பிக்கிறோமோ அப்போதே தெரிந்தோ தெரியாமலோ உறவில் விலகல் ஏற்படுகிறது.

"நான் மறைத்ததற்கு காரணமிருக்கிறது... அது அவருக்குப் பிடிக்காது அதனால் அப்படி செய்தேன்" என்று சொல்வதை விட...
செய்த செயலை சொல்லிவிட்டு அதன் விளைவுகளை ஏற்பது நல்லது. அல்லது எந்த ஒன்றையும் ஒருவருக்கொருவர் கேட்டு செய்வது இந்த இடர்பாடுகளிலிருந்து இருவருமே தப்பித்துக்கொள்ள வழி இருக்கும்.

கணவனோ மனைவியோ குடும்பத்தின் வரவு செலவுகளுக்கு உட்பட்டு செலவு செய்யாதவர்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறார்கள். இது மனதளவில் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது.

குடும்பத்தில் ஏற்படும் பொதுச் செலவுகளை, இரண்டு பேர் குடும்பங்களில் ஏற்படும்
சுப நிகழ்வு இதர செலவுகளை கணவன் மனைவி இருவருமே நன்கு பேசி புரிதலோடு மனமுவந்து செய்ய வேண்டும்.

கணவன் மனைவி வேலைக்கு செல்லும் இடங்களில்/ வீடுகளில்...ego இல்லாமல்
புரிதலோடு வாழ்வது மிக அவசியம்.

அன்பின் மகத்துவத்தை உணரும் இடம் இல்லறம்....
அறவாழ்க்கையை(ஒழுக்கம், கடமை, ஈகை ... இம்மூன்றே அற வாழ்க்கை) வெளிப்படுத்த உதவும் இடம் 
இல்லறம்

"மனத்தை விட்டு விட்டு பேசாமல், மனம் விட்டுப் பேச வேண்டும்..."என பெரியோர்கள் சொல்வார்கள்.

"ஒழுக்கம்/கற்பு என்பது இருவருக்குமே சொந்தம்" என்பதை உணர வேண்டும்
என இதிகாசங்கள் புராணங்கள் மட்டுமல்ல... வாழ்வாங்கு வாழும் தம்பதிகளும் சொல்கிறார்கள்.

திருமணமானபின், அவரவர்.. அவரவர் புகழ் பாடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
(என்னை மானாமதுரையில கேட்டாங்க... மன்னார்குடியில் கேட்டாங்க...என்பதைப் போன்ற) அவரவர் குடும்பத்தின் புகழ்(நாங்கள்லாம்....எங்க குடும்பமெல்லாம் என ஆரம்பிப்பது.....) பாடுவதையும் நிறுத்த வேண்டும். மாற்றாக, ஒருவர் மற்றவர் புகழை பாட வேண்டும். இருவரும் இணைந்த தம் குடும்பத்தின் பெருமையை இந்த உலகம் பாட வழி செய்யவேண்டும்.
இதுதான் சரி...

வாழ்க்கையில் கவலைகள் வருவது
இயற்கை. அவற்றை பகுத்துப் பார்த்து
புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு, இக்காணொளி உதவலாம்.

https://youtu.be/2sBz-Py24ks

.... பல புத்தகங்கள் எழுத வேண்டிய இந்த தலைப்பை ஒரு சிறிய செய்தியாக,வாட்ஸப்பில்... முகநூலில் பதிய வைத்து விட
இயலாது.

எனினும்,நாம் எல்லோருமே
ஏற்கனவே இது குறித்து முற்றிலும் அறிந்தவர்கள் தான்... இவை எதுவும் புதிதல்ல... சற்று நினைவூட்டல் ஆகத்தான் இக்கருத்துக்கள் இருக்கப்போகிறது...என்பதே
100% உண்மை.

இருந்தாலும்...மீண்டும் சுருக்கமாக, இந்த 8ஐ நினைவில் வைப்போம்.

Love...
Understanding, 
Adjustment,
Transparent,
Truthfulness,
Discipline,
No ego,
Friendship.
....... இவை கணவன் மனைவி உறவு வலுப்பெற 100% உதவும்.

நன்றிகள்....!

#Husband, #wife, #relationship, #love, #life, #world

வாழ்க வளமுடன்.

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send