Self-confidence
Live without losing self-confidence
மக்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் 500 ரூபாய் நோட்டைக் காட்டி”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தனக்குப் பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு
இந்த 500 ரூபாயைத் தருகிறேன்,
ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார்,
பிறகு அதை சரி செய்து...
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும்
கைகளை தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை.
ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும்,தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே
தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை, நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
வாழ்க்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரம்.
ஆகையால்,
"#தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள் “.இந்த நாள் இனியநாளாகட்டும்.
Comments