LIFE

LIFE

 

#life #amma #love #help


~ 60 வயது பாட்டி தொடர்ச்சியான (2 மாதமாக) மாதவிடாய் மாதிரியான ரெத்த போக்கு (post menopausal bleeding) இருந்தது னு வந்தாங்க.. அடிவயிறு ஸ்கேன் பண்ணனும் பாட்டி னு சொன்னதும்..

"ஸ்கேன் க்கு எவ்ளோ ஆகும் ஐயா.."

"CT scan பாட்டி.. எப்படியும் 4,500 ரூவா ஆகும்.."

"எனக்கு பசங்க
மூணு பேருங்க ஐயா.. யாரும் கண்டுக்குறது இல்ல.. நான் ஒரு லேடீஸ் hostel ல்ல சமைக்குற வேலை பாத்துட்டு இருக்கேன்.. ஸ்கேன் க்கு லாம் அவ்ளோ செலவு லாம் பன்ன முடியாதுங்க ஐயா"

"சரி பாட்டி.. நாளைக்கு இங்க 9 மணிக்கு லாம் வந்துருங்க."

மறுநாள் காலை..

"பாட்டி.. ஸ்கேன் பன்னிட்டு வந்துருவோம்"

"ஐயா.. காசு இல்லைங்கயா.."

"அட.. bike ல ஏறு பாட்டி.."

நேரா KGS Madurai Scan போனோம்..

பில் கட்டிட்டு "வாங்க பாட்டி.. scan எடுத்துருவோம்.."

"எதுக்கு யா. உங்களுக்கு தேவையில்லாத செலவு"

"பேசாம வாங்க பாட்டி"

3 மணி நேரதில் ஸ்கேன் ரிப்போர்ட் வந்தது

பாட்டிக்கு கர்ப்பப்பை புற்றுநோய் எப்டி சொல்றதுன்னு தெரியாம தயங்கி தயங்கி சொன்னேன்..

"ஏன்டா ஆண்டவா என்னைய சோதிக்குற.. என்னைய நிம்மதியா சாக விட மாட்டியா.." னு அங்கையே அழ ஆரம்பிச்சுட்டாங்க..

எப்படியோ தேத்தி அவங்கள அனுப்பிட்டு அடுத்த நாள் வர சொல்லி GH க்கு கூப்பிட்டு போனேன்..

அங்க எனக்கு தெரிஞ்ச professor ரிடம்

அனைத்து விவரங்களையும் சொன்னேன்.. பாத்துக்கலாம் பா..
னு சொன்னவர்..

"ஆரம்ப stage தான்.. கர்ப்பப்பை ய எடுத்துருவோம்.. அதுக்கப்புறம் radiotherapy கொடுக்கணும்.. காப்பீடு திட்டம் இருந்தா இன்னும் easy யா முடிஞ்சுரும்" னு சொல்லவே..

"பாட்டி.. காப்பீடு அட்டை இருக்கா.." னு கேட்டேன்..

"அப்படினா என்னங்க ஐயா."னு கேட்டாங்க.

எல்லாம் விசாரித்து விட்டு அதற்கான வேலையயையும் செய்ய ஆரம்பித்தேன். 3 நாளில் காப்பீடு அட்டையை கலெக்டர் ஆபிஸில் வாங்குனேன்.

பாட்டிக்கு நல்லபடியாக கர்ப்பப்பை நீக்க operation முடிந்து radiotherapy அப்பல்லோ மருத்துவமனையில் 5 வாரம்
கொடுக்கப்பட்டது

முழுமையாக மீண்டார்.

"மூணு புள்ள பெத்தேன்.. செத்தேனா.. உயிரோட இருக்கேனா னு ஒண்ணு கூட கண்டுக்கல.. நீ தான்யா உயிர புடிச்சு வச்சிருக்க.. உங்க அப்பன் ஆத்தா நல்லா வளத்துருக்காங்க. நன்றியா"னு சொன்னதும்,

மனசுல.. "உன்ன சம்பாதிக்குறதுக்கு Dr படிக்க வைக்கல டா.." னு அப்பா சொன்னது கேட்டது...

#life #amma #love #help

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send