Psychological information about Man

Psychological information about Man

 

Psychological information about Man

மனிதம் பற்றிய உளவியல் தகவல்


1.ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.


2.அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.


3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.


4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய் விட்டு சிரித்துக் கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர் தான் உங்களுக்கு ரொம்பப் பிடித்தவராவர்.


5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.


6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளுமாம். 


7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.


8. மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.


9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் ஒன்று,அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.


10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம் யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள் தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.


11. ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம் என்று

 உளவியல் கூறுகிறது.


12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார்(ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாகப் போகின்றார்) என்று அர்த்தம். 


13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனக் கருத முடியும். அவர் அந்தப் பதற்றத்தினை குறைத்துக் கொள்ள வேண்டும்.


14. ஒருவர் அதிகாலையில் எழுபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும்.


15. ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாறானவர்களுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.


16. ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் (Notification tones) கேட்டால் உடனடியாக அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார் என்று அர்த்தம்.


17. ஒரு மனிதன் ஆகக் குறைந்தது 6 மணித்தியாலங்கள் (மணி நேரம்) ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலைத் தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.


18. ஒருவர் அதிகமாக  Negative Thoughts (முடியாது/கிடைக்காது/இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts பேசுபவராக இருப்பார்.


#Men, #life, #help, #data

Comments

  1. https://www.youtube.com/playlist?list=PLatTu-cbqifTs7ByIWkYMJZZ9dI3Un5W2

    ReplyDelete

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send