Gas cylinder awareness

Gas cylinder awareness

#Gas_cylinder, #gas, #awareness


வணக்கம் நண்பர்களே,
 நேற்று இரவு நல்ல மழை  டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப்பில் வைத்த  கொஞ்ச நேரத்தில் கேஸ் நின்று விட்டது. 
 உடனே புது சிலிண்டரை மாத்தினேன்.
 வைத்த உடனே  கேஸ் லீக் ஆகியது.
 உடனே எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு யோசிக்க, அப்போது நேரமோ ஒன்பது மணி. 
மெக்கானிக்கை எங்கே தேடுவது?,  
 உடனடியாக கூகுளில் தேட எமர்ஜென்சி கேஸ் லீக்கேஜ் என்றால் 1906 என்ற எண்ணை  தொடர்பு கொள்ள வேண்டும் என அறிந்து அதற்கு ஃபோன் செய்தேன்.
       ஒரு அதிகாரி  பேசினார். 
கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்டார். 
நான் நம்பரை சொன்னவுடன் எனது பெயர் முகவரி மற்றும் டீலர் பெயர் இவற்றை கூறி நம்முடன் சரிபார்த்து விட்டு  சற்று நேரத்தில் ஆள் வருவார் எனவும் சிலிண்டரில்  பிரச்னை என்றால் எதுவும் பணம் தரத் தேவையில்லை , ரெகுலேட்டர் ட்யூப் இவற்றில் பழுது இருந்தால் அதற்கான பணம் தர வேண்டும் என்றார்.
      சில நொடிகளில் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
 அதில் புகார் எண், மெக்கானிக்கின் தொடர்பு எண், வேலை முடிந்ததும்  அவரிடம் கூற வேண்டிய ஒடிபி எண் ஆகியவை இருந்தது. 
பத்து நிமிடத்தில் மெக்கானிக்  என்னை தொடர்பு கொண்டு வழியை கேட்டு கொண்டார். 
      வீட்டுக்கு வந்து சிலிண்டரை சோதித்து வாஷர் இல்லை எனவும் கூறி புதிய வாஷரையும் மாற்றி விட்டு அடுப்பை பற்றவைத்து சோதித்து எல்லாம் நன்றாக உள்ளது.
 இனி பயமில்லை என்று சொல்லி அந்த ஒடிபி எண்ணை கேட்டு உடனே அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.
 இதற்காக நான் பணம் தந்தபோது அதை வேண்டாம் என மறுத்து விட்டார்.
       அடுத்த ஜந்து நிமிடத்தில் எனக்கு ஃபோன் செய்து தங்களது புகார் சரியாகி விட்டதா என்று விசாரித்தனர். 
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 
 இந்த சேவை பற்றி எனக்கு இதுவரை தெரியாது. அற்புதமான சேவை.
      இது நம்மில் பலருக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்காக!!
 படித்ததில் பகிர்வு👏

#Gas_cylinder, #gas, #awareness

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send