House-Land
சர்வே எண்களும் தீர்வுகளும்.
*****************************************************
Layout போடுபவர்கள் பெரும்பாலோர் நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து Power
of Attorney வாங்கி நிலத்தை Layout ஆக பிரித்து அரசாங்கத்தின் அங்கீகாரம்
பெற்று விற்பனை செய்கிறார்கள். அவர்கள் Power of Attorney வாங்குவதற்கு
இரு காரணங்கள் உண்டு.
1.நிலத்திற்கு உரிய மொத்த பணத்தையும் உரிமையாளரிடம் கொடுத்து நிலத்தை
வாங்க முடியாத நிலை.
2.கிரயப்பத்திரம் செய்தால் Guide line மதிப்பிலிருந்து 8% (தற்போது 7%)
முத்திரைத்தாள்கள் மற்றும் 1%(தற்போது 4%) பதிவு கட்டணம் மற்ற இதர செலவுகளை
தவிர்பதற்காகவும்
Layout போடுபவர்கள் ஒரு ஏரியாவை தேர்வு செய்து ஒன்றுக்கு மேற்பட்ட
உரிமையாளர்களிடம் நிலத்தை வாங்குவார்கள். அப்படி நிலம் வாங்கும் போது
ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே எண்கள் அதில் அடங்கி இருக்கும். நில
உரிமையாளர்களும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பாபர்கள். ஒவ்வொரு சர்வே
எண்ணுக்கும் தனித்தனியே ஒரு வரைபடம் உண்டு. அதை FMB என்று சொல்வார்கள்.
(எ.கா) Layout போடும் ஒருவர் A,B,C ஆகிய மூன்று நபர்களிடமிருந்து
நிலங்களை வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.Aயிடம் இருந்து சர்வே எண். 862-ல்
அடங்கிய 1 ஏக்கர் 10 சென்ட், Bயிடம் இருந்து சர்வே எண். 866-ல் அடங்கிய 1
ஏக்கர், C யிடம் இருந்து சர்வே எண். 867/4-ல் அடங்கிய 1 ஏக்கர் 25
சென்ட், ஆக மொத்தம் 3 ஏக்கர் 35 சென்ட் இடம் வாங்கி layout போடுகிறார். 3
ஏக்கர் 35 சென்ட்டில் மொத்தம் 24 பிளாட் (மனைகள்) வருவதாக வைத்துக்
கொள்வோம். இந்த மூன்று பேரின் சர்வே எண்ணுக்கும் தனித்தனி வரைபடம்
உண்டு. இந்த மூன்று சர்வே எண்களையும் இணைத்து 24 மனை பிரிவுகள்
பிரிக்கப்படும். இதில் உள்ள ஒவ்வொரு மனை பிரிவும் மேலே சொல்லப்பட்ட
மூன்று உரிமையாளர்களில் ஒருவர் இடத்தில் மட்டும் அல்லது இருவருடைய
இடத்திலும் வரலாம். அதாவது ஒரு சர்வே எண் அல்லது இரண்டு சர்வே எண்களில்
வரலாம். இப்படி வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்ட Layout-ல் இருந்து மொத்தம்
உள்ள 24 வீட்டு மனைகளை 24 பேர் தனித்தனியாக வாங்குகிறார்கள். இந்த 24
வீட்டு மனைகளும் எந்தெந்த சர்வே எண்களில், எந்த இடத்தில், எவ்வளவு ஏரியா
ஆகிய விவரங்கள் FMB-ல் குறிக்கப்பட்டு அதற்கு தனியாக பட்டா வழங்கப்படும்.
இதற்கு தான் உட்பிரிவு பட்டா (Sub Division Patta) என்று பெயர். இவ்வாறு
24 மனைகளுக்கும் உட்பிரிவு செய்து பட்டா வழங்கப்பட வேண்டும்.
சில மனைகள் ஒரு சர்வே எண்ணில் அமையும்.
(எ.கா)1 முதல் 10 மனைகள்
அனைத்தும் சர்வே எண் 862-ல் மட்டும் அமைந்திருக்கிறது மற்றும் 18 முதல்
24 மனைகள் சர்வே எண். 867/4-ல் மட்டும் அமைந்திருக்கிறது . சில மனைகள்
இரண்டு சர்வே எண்களில் அமையலாம். (எ.கா) மனை எண்கள். 11-லிருந்து 17 வரை
சர்வே எண்கள். 866 மற்றும் 867/4 இந்த இரண்டிலும் அமைகிறது. இது,
கிரயப்பத்திரம் செய்யப்படும் போது சொத்து விவரப்பகுதியில் மனை
அமைந்திருக்கும் சர்வே எண்கள் 866 பகுதி மற்றும் 867/4 பகுதி என்று தான்
குறிப்பிடப்பட்டிருக்கும். இப்பொழுது இதற்கு பட்டா வழங்கும் போது இரண்டு
சர்வே எண்களிலும் எந்தெந்த அளவு இந்த மனை அமைந்திருக்கிறது என்பதைக்
குறிப்பிட்டு இரண்டு சர்வே எண்களும் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா
வழங்கப்படும்.
இப்படி 24 மனைபிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு layout -ல் இடம்
வாங்கும் 24 பேரும் தனித்தனியாக பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் போது 24
முறை உட்பிரிவு செய்யப்படுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்திலும்
ஒவ்வொருவரும் தனித்தனியே விண்ணப்பம் செய்யும் போது உட்பிரிவு process
பண்ணப்படுகிறது. ஒரே சர்வே எண் பல முறை உட்பிரிவு செய்யப்பட்டு புதிது
புதிதாக இலக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அதனால் உட்பிரிவு இலக்கங்களும்
குழப்பங்கள் ஏற்படுத்துவதாக இருக்கும். 24 மனைகள் கொண்ட இந்த layout ல்
மனை எண். 1ல் இருந்து 10 வரை உள்ள மனைகள் அனைத்தும் சர்வே எண் 862-ல்
அமைந்திருக்கிறது. வருவாய்த்துறை பதிவேட்டின்படி இந்த சர்வே எண் layout
போட்ட உரிமையாளர் பெயரில் தான் இருக்கும்.
இப்பொழுது, 5.5 சென்ட் அல்லது
2396 சதுர அடி (தோராயமாக ஒரு கிரவுண்ட்), மனை எண். 7ன் உரிமையாளர்
வருவாய்த்துறையில் உட்பிரிவு பட்டாவிற்கு விண்ணப்பம் செய்கிறார்.
இப்பொழுது 862 சர்வே எண்ணின் மொத்தம் அளவான 1 ஏக்கர் 10 சென்டானது
இரண்டாக பிரிக்கப்படுகிறது. 5.5 சென்ட் அளவு கொண்ட மனை எண்.7 ஒரு
பிரிவாகவும் மீதமுள்ள 1 ஏக்கர் 4.5 சென்டுள்ள இடம் lay out
உரிமையாளருக்கும் என பிரிக்கப்படுகிறது.
இப்பொழுது சர்வே எண்.862 இரண்டு
பகுதி 862/1 மற்றும் 862/2 என பிரிக்கப்படுகிறது. சர்வே எண். 862/1 - 1
ஏக்கர் 4.5 சென்ட் layout உரிமையாளர் பெயரிலும் சர்வே எண். 862/2 - 5.5
சென்ட் அளவு கொண்ட மனை எண். 7-ன் உரிமையாளருக்கும் இரண்டு பட்டாக்களாக
வழங்கப்படுகிறது. 862 சர்வே எண் அடங்கி உள்ள மனைகளை 10 பேர் வாங்கி
இருந்தாலும் 7-ஆவது மனை எண் உரிமையாளருக்கு மட்டும் பட்டா வினியோகித்த
காரணத்தினால் அவருக்கு சொந்தமான 5.5 சென்ட் மட்டும் உட்பிரிவு
செய்யப்பட்டு FMB -ல் குறிக்கப்பட்டு தனிப்பட்டா வழங்கப்படுகிறது. மீதி
உள்ள 9 பேர் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யாததால் 862 -ல் மீதமுள்ள அளவு 1
ஏக்கர் 4.5 சென்ட் நிலம் layout போட்ட உரிமையாளரின் பெயரில் தான்
இருக்கும்.
#ஆகன்construction
இது போன்ற கட்டிடங்கள் பற்றிய மேலும் தகவல்களை தொடர்ந்து படிக்க எங்களது #Facebook, #Instagram, #LinkedIn, #twitter இல் besttamilquotes இணையுங்கள் …
உங்களது கேள்விகளுக்கு என்போன்ற பல பொறியாளர்களின் கருத்துக்களையும் படித்து தெரிந்துகொள்ளலாம் …
நன்றி
வணக்கம்.
Comments