Life

Life

 

கண்ணதாசன்..... 🌿🙏🌿..


அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார்


கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – #கண்ணதாசனை ..!


ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக்கொண்டிருந்தார்


"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். 


நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , 


கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். 🌿


ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”


அவ்வளவுதான் ..!

அடுக்கடுக்காக போன் கால்கள் ..! 

யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!🌿


“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். 


நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் , 


இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது.. 


அற்புதமாக பேசினீர்கள்..!”🌿


இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க , 


உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!


மறுபடியும் ஒரு போன் கால் !🌿


“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.


மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."🌿


பதறிப் போனார் அந்தப் பெண் . 

அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!


உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள , 


போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க சார் ..”🌿


தொடர்ந்து #கண்ணதாசன் :


"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். 


ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். 🌿


பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , 


உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. 


ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , 


பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது. 🌿


அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன். 


உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் , 


கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 

'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு' 


என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?🌿


ஆனால் அதையே நான் 

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" 


என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. 


இது தவறு என்று சொல்கிறீர்களா?" 


ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் ,


இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் : “மன்னித்துக் கொள்ளுங்கள் சார் ..”🌿


இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :


“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது". 


இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...


அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!🌿


அடுத்த காரணம் .. 


திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் , 


இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!


ஆம் ..!


“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்.... 🌿


#நிலை #உயரும் #போது #பணிவு #கொண்டால் 

#உயிர்கள் #உன்னை #வணங்கும்”🌿🌿


எளிமையான மனிதனையும்,

தாழ்மையுள்ள மனிதனையும் தான்

இறைவன் மிகவும் நேசிக்கிறார் 🌿..

#பைபிள்...... 🌿


உயர்ந்த சிந்தனையுள்ள அண்ணன்

கண்ணதாசன் அவர்களுக்கு பணிவான

வணக்கங்கள் 🌿🙏🌿நன்றி 🌿...



Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send