Negative thinking
_*நேர்மறைச் சிந்தனை கொண்டவர்களிடம் நட்பு பாராட்டுங்கள்.*_
எதிர்மறை எண்ணம் எளிதில் பரவக்கூடியது. எனவே அத்தகைய எண்ணம் கொண்ட நபர்களிடமிருந்து தள்ளியே இருங்கள்.நண்பர்களை பொழுது போக்கிற்கானவர்களாக மட்டும் கருதாமல் நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும் வளர்த்துக் கொள்வதற்காகக் கருதுங்கள்.
உண்மையான நேசம் அரிது; உண்மையான நட்பு அரிதினும் அரிது' - 17-ம் ஆண்டு வாழ்ந்த கதாசிரியர் ஜீன் டே லா ஃபான்டெயின் (Jean de La Fontaine) இப்படி அடித்துச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
யதார்த்தத்தில் நாம் எல்லோருமே உணர்ந்திருக்கும் விஷயம்தான் இது.கையடக்க மொபைலில் உலகம் சுருங்கிவிட்ட இந்தக் காலத்திலும்கூட ஓர் உண்மையான நண்பன் கிடைப்பது அரிதாகத்தான் இருக்கிறது.
ஒரே விதமான சிந்தனை கொண்டவர்களோடு உரையாடுவதும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும்.
நமக்குப் பிரச்சனை ஏற்பட்டால் நமக்குச் சரியான முறையில் எடுத்துரைக்க ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே, நமது சுய மதிப்பீடுகளை அதிகரிக்கும்.நட்பு என்பது ஆரோக்கியம் போன்றது.
அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.
#Think, #Thinking, #life, #help
Comments