Success Life
சிரித்துக்கொண்டே யோசனை செய்!
*வெற்றி பெறுவது எப்படி?*
பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?” என்று ஒரு இளைஞன் கேட்டான்.அதற்கு வீரன் சொன்னான்: “முதலில் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும்!”
நமது வாழ்க்கையும் – நமது முயற்சிகளும் ஒரு ஓட்டப்பந்தயந்தான்.
அதில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும்!
இரண்டாவதாக, எந்தப் பந்தயத்திலும் வெற்றி-தோல்வி உண்டு என்பதை உணர வேண்டும்.
ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு அல்லவா? தோல்வி கண்டு துவண்டுவிடாமல், அடுத்த பந்தயத்துக்கு முயற்சி செய்ய வேண்டும்.
“வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு” என்பார்கள். அந்த வீரனாக நாம் விளங்க வேண்டும்!
அடுத்து முயன்றால் ஆகாதது ஒன்றுமில்லை!
வீரன் தோல்வியிலும் வெற்றிக்கான விதையைக் காண்கிறான்; எனவே அவனுக்கு தோல்வியும் வெற்றிதான்!
யானை படுத்தாலும் குதிரை மட்டம் அல்லவா?”
#life #successfully #success #motivational
Comments