Why do women wear bangles?

Why do women wear bangles?


பெண்கள் வளையல் அணிவது ஏன்?

பெண்கள் அணியும் வளையல்களின் வியக்கதக்க நன்மைகள்!!


இந்திய பெண்கள் அணிகின்ற முக்கியமான அணிகலன்களுள் ஒன்று வளையல். 


இது நம் இந்திய கலாச்சாரத்தில் மங்களகரமான பொருளாகவே கருதப்படுகிறது.


காலம் காலமாகவே நம் முன்னோர்கள், பெண்கள் கட்டாயம் வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றார்கள்.


நம் முன்னோர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள்?.. பெண்கள் வளையல் அணிவதன் ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்களை பார்க்கலாம் வாங்க...!!!


 *வளையலின் சிறப்பு :* 


வளையலின் ஓசை என்பது ஒரு வகை தெய்வீக ஓசைக்கு ஒப்பாக கருதப்படுகிறது. வளையல் ஒன்றோடு ஒன்று இடித்து கொள்ளும் போது க்ரியா சக்தி உருவாகி அது பெண்களின் சூரிய நாடியை தூண்டுவதாக சொல்லப்படுகிறது. 


இந்த சூரிய நாடி உருவாக்க கூடிய ஆற்றல் பெண்களின் உடலை சுற்றி ஒரு ஆராவாக அவர்களை காக்கிறது.


பண்டைய காலத்திலும் சரி, தற்போதைய நவீன காலத்திலும் சரி வளையல்கள் பெண்களுக்கு தனி அழகு தருவதுடன், வளையலில் இருந்து வரும் ஒலியானது நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் கொடுக்கிறது.


 *கண்ணாடி வளையலின் மகிமை :* 


கண்ணாடி வளையல், தங்க வளையல், வெள்ளி வளையல், செம்பு வளையல், மெட்டல் வளையல், முத்து வளையல், பேன்சி வளையல், நூல் வளையல், பிளாஸ்டிக் வளையல் என எத்தனையோ வகையான வளையல்கள் இருந்தாலும் கண்ணாடி வளையலுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு.


பெண்களுக்கு, கர்ப்ப காலங்களில் வளைகாப்பு நடத்தும் போது ஒரு முக்கிய பங்கு வகிப்பது இந்த கண்ணாடி வளையல்கள் தான்.


கர்ப்பிணிப் பெண்களுக்கு நாம் அணிவிக்கப்படும் வளையல் ஒரு காப்பாக, அதாவது கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காகவே அணிவிக்கப்படுகிறது. இதன் மூலமாகத்தான் இதற்கு வளைகாப்பு என்ற பெயரே வந்தது. 


கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்களின் ஒலி மன அழுத்தத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் கருவில் இருக்கும் குழந்தையின் கேட்கும் திறனையும் அதிகரிக்க உதவுகின்றது. இது குழந்தைக்கு நேர்மறை ஆற்றலை உண்டாக்குகிறது.


இந்த கண்ணாடி வளையலின் ஓசை இருந்தால் பெண்களிடம் தீய சக்திகள் அண்டாது. கண் திருஷ்டியும் அண்டாது. நம் வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.


கண்ணாடி வளையல்கள் வளிமண்டலத்தில் இருந்து நன்மை மற்றும் தூய்மைகளை உறிஞ்சி, இயற்கையான சூழல்களில் நிலவும் சக்திகளை அதை அணிபவருக்கு கொடுக்கிறது.


பழுப்பு நிற வளையல்கள் உடலில் சந்தோஷத்தையும், சிவப்பு நிற வளையல்கள் கெட்டதை அழிக்கும் சக்தியையும் கொடுக்கும். மேலும் ஊதா நிற வளையல்கள் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கவும், கறுப்பு நிற வளையல்கள் மன தைரியத்தையும், மஞ்சள் நிற வளையல்கள் நேர்மறையான எண்ணத்தையும், தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள் எதிர்மறை எண்ணங்களை குறைக்கவும் பயன்படுகிறது.


 *வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:* 


மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கை நிறைய வளையல்கள் அணிவது நல்லது. கண்ணாடி வளையல்களின் ஒலிகள் மென்மையானதாக இருப்பதால் அணிபவர்களின் மன நிலையையும், உடனிருப்பவர்களின் மனநிலையையும் மேம்படுத்துகிறது.


பருமனான உடல் எடை கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணிவதன் மூலம், உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க உதவுகிறது.


வளையல்களை இந்த மணிக்கட்டு பகுதியில் அணியும் போது அவைகளின் தொடர் உராய்வினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் இது உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை கொடுத்து உடலில் ஏற்படும் நிறைய பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.

#bangles #women #girls #life

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send