Life is for living.

Life is for living.

 

Life is for living.

Life is for living.


1. ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.

2. பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள்.

3. கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.

4. எளிய வாழ்வையும், உயர்ந்த எண்ணத்தையும் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும்.

5. வயிறு புடைக்க உணவு சாப்பிடக் கூடாது. எப்போதும் உணவில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

6. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சுயநலமின்றி பிறரை நேசியுங்கள்.

7. யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.

8. வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்ளுங்கள். முடியாவிட்டால் பால், பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

9. பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். சொந்தக் காலில் நில்லுங்கள்.

10. ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நன்னெறி தரும் சான்றோரின் வரலாற்றைப் படியுங்கள்.

11. அதிகாலையில் எழுந்து பணிகளில் ஈடுபடுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கேளிக்கையில் ஈடுபடாதீர்கள்.

12. சத்தியம் இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் இருக்கும். சத்தியமும் கடவுளும் வெவ்வேறானதல்ல.

13. உடலுக்கு உணவு போல, உயிருக்கு பிரார்த்தனை மிகவும் அவசியமானது.

14. தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.

15. திருப்தியுடன் வாழ வேண்டுமானால், ஆடம்பர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் எளிமையாய் வாழ்வோம்.

16. எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு இயன்ற சேவைகளைச் செய்யுங்கள்.

17. பெற்றோரை கடவுள் போல் நேசியுங்கள், அனைவரிடமும் அன்பை வளருங்கள். மனித சமுதாயம் மீதுள்ள அன்பு, முதலில் நம் வீட்டிலேயே துவங்குகிறது என்பதை உணருங்கள்.

18. மிருக குணத்தைப் போக்கி, மனிதத் தன்மையை கைக்கொள்வதே தெய்வீக வாழ்க்கை. தூய தன்மையை அனைவரும் கடைபிடித்தால் வாழ்க்கையில் உயரலாம்.

19. பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையால் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றை மறந்து மன்னிப்பதுடன், மக்களுடனும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.

20. அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். இதைப் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் நம்மை வந்தடையும்.

21. தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து தியானம் செய்து மனதை ஒருமுகப்படுத்துங்கள். தியானம் செய்ய தனியிடம் தேவை. அந்த இடம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது.

22. ஒழுக்கத்தை என்னும் உறுதியான அடிப்படையை கொண்டு தெய்வீக வாழ்க்கை வாழுங்கள். விரைவில் வாழ்வின் லட்சியத்தை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும்.

23. செய்த தவறுகளைக் குறித்து எண்ணிப் பார்த்து உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் சுயசோதனை என்பர். அடுத்தவர்களின் குறையைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

24. எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்தபட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை தருவதாகும்.

25. வெட்டிப் பேச்சினால் பயன் கிடையாது. மக்களுக்குத் தொண்டு செய்வதில் தனித்திறமையும், பற்றும் கொண்டு விளங்குங்கள். உங்கள் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் சேவை எண்ணம் மிளிரட்டும்.

26. நன்மை தராத செயல்களையோ, வெட்கப்படக் கூடிய செயல்களையோ ஒருபோதும் செய்யாதீர்கள். சமூகம் புகழும் நல்ல செயல்களையே விருப்பத்துடன் செய்யுங்கள்.

27.நல்ல நூல்களைப் படியுங்கள். நல்லவர்களோடு பேசுங்கள், பழகுங்கள்.

வாழ்க வளமுடன் நலமுடன்...

#life, #success, #motivational, #true, #fact, #best


Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send