Life is like thought
எண்ணம் போல் வாழ்க்கை
"இன்றைய உங்கள் எண்ணம் மற்றும் உணர்வு, உங்கள் எதிர்காலத்தை உருவாக்குகிறது."எண்ணம் போல வாழ்வு
உணர்வு போல வாழ்வு
என்று பலரும் கூறுகிறார்கள், அதை நாமும் நம்புகிறோம் ஆனால், அது எப்படி நிகழ்கிறது என்பது தெரியுமா?
இவ்வளவு ஆண்டுகளாக நாம் வாழ்ந்துள்ள நமது வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். அதில் பெரும்பாலும் நாம் எடுத்த முடிவுகளால் தான் நிறைய மாற்றங்களை நாம் பெற்றிருப்போம்.
நேர்மறையான அல்லது எதிர்மறையான நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும் சரி அது நாம் எடுத்த முடிவுகளால் தான் நிகழ்ந்திருக்கும்.
நாம் அப்போது ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்று சிந்தித்துப் பார்த்தால், அது நமது எண்ணங்கள் மற்றும் அந்த நேரத்தில் நம்முடைய உணர்வுகளின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும்.
இதனால் தான் எண்ணம் போல வாழ்வு, உணர்வு போல வாழ்வு என்று கூறுகிறார்கள்.
அப்படியென்றால், நாம் எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறோமோ? அது சார்ந்த எண்ணங்களை, அது சார்ந்த உணர்வுகளை நாம் வளர்த்துக்கொண்டால் அதற்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுப்போம். அதற்கு ஏற்ப நமது வாழ்க்கையும் மாறும் என்பது சரிதானே?
அதைத்தான் ஈர்ப்பு விதியின் இந்தத் தத்துவத்தின் வழியாக செயல்படுத்த உள்ளோம்.
"இன்றைய உங்கள் எண்ணம் மற்றும் உணர்வு, உங்கள் எதிர்காலத்தை உருவாக்குகிறது."
உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் முடிவு செய்யுங்கள்.
அதை நேர்மறையான மற்றும் நிகழ்கால வாக்கியங்களாக எழுதுங்கள்.
அதுசார்ந்து தொடர்ந்து நேர்மறையாக எண்ணுங்கள், நேர்மறையாக உணருங்கள்.
அதை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்துங்கள்.
அதுபோலவே உங்கள் வாழ்க்கையும் மாறும்.
நீங்கள் விரும்பும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.
#life, #motivation, #success, #help, #share
.jpg)

Comments