Moral stories
நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..
ஒரு சின்ன கதை....
சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன.
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.
போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?'
'ஏன் சிறுத்தை ஓடவில்லை?'
என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.
அதற்க்கு அவர் சொன்ன விடை..
“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.
சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.
ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க
முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.
தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்..
நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..
Comments