Nothing is permanent

Nothing is permanent

#life, #help, #people, #data, #today, #now, #nothing, #passed, #permanent

 💝**எதுவும் இல்லை..இதுவும் கடந்து

   போகும்....**


குறைகளோடு படைக்கப்பெற்றவர்கள்தான் நாம் அனைவரும்!!!!


♥திருமணம் முடித்த ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் கவலைப் படாதீர்கள்..


♥ கணவன் சரி இல்லையே என்ற கவலையா??? பெண்களே கவலைப் படாதீர்கள்! உங்கள் தாயாரும் ஒரு கட்டத்தில் அப்படி கவலைப் பட்டவர் தான்..கணவனை திருத்தும் திறமை உங்களுக்கு உண்டு என நினையுங்கள்...


♥ மனைவி சரி இல்லை என்ற கவலையா? ஆண்களே கவலைப் படாதீர்கள்! எந்த ஆணுக்கும் 100% விருப்பமான மனைவி கிடைத்ததில்லை... மனைவியை புரிந்து கொண்டு நடக்கும் மனம் வேண்டும் என நினையுங்கள்...


♥குழந்தை இல்லையே என்ற கவலையா....??? கவலைப் படாதீர்கள்! தாய் தகப்பன் இல்லாமல் இருக்கும் பல குழந்தைகள் உங்களுக்காகவே காத்திருக்கிறார்கள் பல இல்லங்களில்...


♥பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! உங்கள் கஷ்டங்களை பிள்ளைகளிடம் மறைக்காமல் வெளியே தெரியும் படி கஷ்டத்தை உணர்த்துங்கள்..


♥சொந்த வீடு இல்லையே என்ற கவலையா??? கவலைப் படாதீர்கள்! இறுதியில் நம்மோடு வரப் போவது எதுவும் இல்லை என நினைத்து வாழும் வரை மகிழ்ச்சியாக வாழுங்கள்....


♥தீராத நோய் என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! மனதில் எந்த நோயும் இல்லை என சந்தோசப் படுங்கள் சுகமடைவீர்கள்....


♥பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! நாளைய பெற்றோராக நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்ற பாடமாக அதை எடுங்கள்....


♥படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா??? கவலைப் படாதீர்கள்! இன்றைய உலக பணக்காரர்கள் 90% மாணவர்கள் படித்த வேலை கிடைக்காது கிடைத்த வேலையை செய்தவர்களே...


♥உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...??? கவலைப் படாதீர்கள்! யாரும் உங்களுடன் கூடப் பிறக்கவில்லை என நினைத்து விடுங்கள்...


♥திருமணம் ஆகவில்லையே எனக் கவலைப் படுகிறீர்களா? உங்களுக்கான சிறந்த துணை காத்திருக்கிறது என நினையுங்கள்.. விரைவில் சிறந்த துணை அமையும்...


♥கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால், அவர்கள் முதுகில் குத்தி விட்டார்களா? கவலைப் படாதீர்கள்! உங்களின் கஷ்ட காலம் அவர்களோடு போய் விட்டது என நினையுங்கள்...


♥ உம்மீதும், குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா? கவலைப் படாதீர்கள்! உலகின் பல சிறந்த மனிதர்கள் மிக கேவலமான துன்புறுத்தலை எதிர் கொண்டவர்கள் தான்....


♥மொத்தத்தில் தன் மனைவியை கணவனை குழந்தையை சகோதரர்களை பெற்றவர்களை கொ***ல செய்யும் இவ்வுலகம்  நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப் போகிறார்கள்!🤔


♥மனிதர்கள் அப்படித் தான்! *எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!* சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை! ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித் தான் வரும்!. எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு இறைவன் அருளியதை பொருந்திக் கொண்டு வாழ்வோமாக.


♥ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு குறையுடனே படைக்கப் பட்டுள்ளான். எல்லாம் பெற்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை........


❤️ கவலை படாமல் இருங்கள்,...👌


💚நாளை நமதே 👍👍👍


#life, #help, #people, #data, #today, #now, #nothing, #passed, #permanent 


Comments

Emotions
Copy and paste emojis inside comment box

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send