BestTamilQuotes

 


படித்ததில் பிடித்தது... 

இந்த ஓவியம், இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டி வரைந்தது. 

ஓவியத்தில், ஒரு பாம்பின் வால் பகுதி மட்டும் சிறிய ஓட்டையின் வழியாக வெளியே தெரிகிறது. இதனைக் கண்ட பூனை, அது எலியின் வால் என்று நினைத்துக் கொண்டு, அந்த எலியை வெளியே வர வழைக்க அதனை இழுத்து, பிராண்டி விளையாடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய வேகமான மற்றும் யோசிக்க நேரமில்லாத வாழ்க்கையில், உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நாம் காண்கிறோம்.

நம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் அபாயங்கள் தெரியாமல், யாருடன் விளையாடுகிறோம் என்று தெரியாமல், நமது அறியாமை, ஈகோ, முன் முடிவுகள் போன்ற குணங்களால் அந்த பூனை, எலியின் வால் என நினைத்து பாம்புடன் விளையாடுவது போல வாழ்வை அணுகுகிறோம்.

நாம் எலி வாலாக நினைக்கும் பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை விட நிம்மதி, மகிழ்ச்சி, அன்பு ஆகியவை மிகப் பெரியவை. 

நம்மால் வாழ்வின் முழு படத்தையும் பார்க்க முடியாது.  முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை புரிந்து கொள்வோம்

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send