Husband wife relationship and psychological thinking
கணவன் மனைவி உறவு...உளவியல்_சிந்தனை
முதலாவதாக மனைவியையும் மனைவி வீட்டாரையும் மரியாதை கொடுத்து மதிக்க வேண்டும்;
மனைவியுடன் சண்டை வரும் போது மனைவி வீட்டாரை இழுக்கக் கூடாது;
மனைவியின் உடல் குறைகளை குத்திக் காட்டிப் பேசக்கூடாது.
தரக்குறைவான வார்த்தைகளைப் பாவிக்காதீர்கள்.
மனைவியுடன் வெளியே போகும் போது சிடு மூஞ்சியாக இல்லாமல் இயல்பாக கூட்டிப் போங்கள்.
உங்கள் பெற்றோரிடம் மனைவியைப் பற்றிப் பெருமையாகக் கூற வேண்டும்.
வெளியே இருக்கும் போது தொலைபேசியில் பேசி உனக்கு ஏதாவது வேண்டுமா... சாப்டியா... என விசாரிக்கணும்.
அவள் ஆசைப்படுவதை உணர்ந்து முடியுமான வரை வாங்கிக் கொடுக்கனும் .
அடிக்கடி வெளியே கூட்டிச் செல்ல வேண்டும்.
மனைவியின் சமையலை குறை கூறாமல் பக்குவமாக புரிய வைக்கணும்.
முடியும் பொழுது நீங்க சமையல் சமையல் செய்து மனைவியை அசத்தணும்.
அடிக்கடி அன்பாக தோளில் தடவி பேசுங்கள்.
முடியும் பொழுதெல்லாம் சிறு சிறு தொகை பணம் கொடுத்து வையுங்கள்.
அடிக்கடி அவள் பிறந்த வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள்.
மனைவி உடல்நிலை சரியில்லை என்றால் நீங்கள் விடுமுறை எடுத்து அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுங்கள்.
வீட்டில் அவள் எடுக்கும் முடிவுகளை மறுக்காதீர்கள்... தவறாயின் புரிய வையுங்கள்.
அடிக்கடி அவளின் நல்ல செயல்களைப் பாராட்டுங்கள்.
நீ எனக்கு கிடைத்தது என் அதிர்ஸ்டம் என்று கூறுங்கள்.
உங்கள் வெளி விஷயங்களை இரவில் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அவளின் நீண்ட கால விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வையுங்கள்.
மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கான மரியாதையை கொடுங்கள்.
அவளிற்கு பிடிக்காத விடயங்களை தவிருங்கள்.
முக்கியமாக திடீர் என நண்பர்களுடன் வந்து நிக்காதீர்கள்..
ஒரு கணவனானவன் மனைவியை எவ்வாறெல்லாம் நடத்த வேண்டும் ?
தனியறையில் காதலுடன்
சமுதாயத்தில் தலைவியாக
குழந்தைகள் மத்தியில் பாசத்துடன்
உறவுகள் மத்தியில் கண்ணியத்துடன் …
நண்பர்கள் முன்னிலையில் மரியாதையுடன் …
முடியாத வேளையில் தாயாக …
கொஞ்சும் வேளையில் குழந்தையாக …
30-ல் தோழியாக …
40-ல் நாயகியாக …
50-ல் அவளை அவளாக …
60-ல் அம்மாவாக …
70ல் ஏஞ்சலாக …
80-ல் எல்லாமாக, அவளையே எல்லாமாக …
இப்படி இருந்தால் கணவன் மனைவி உறவு சந்தோஷம் இருக்கும்...❤️
#life, #husband, #wide, #thinking, #Psychological_facts, #fact, #data, #updated, #survey, #relationship
Comments