Brother's Day

Brother's Day

 

Brother's Day

*சகோதரர்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்த அர்பணிப்படும் தேசிய சகோதரர்கள் தினம்*

ஆண்டுதோறும் மே 24ஆம் தேதி தேசிய சகோதரர்கள் தினம். சகோதரகளுக்கு இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், சிறப்பாக்கவும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் இதயப்பூர்வமான படங்களையும் பகிர்ந்து கொள்ளவும் அர்பணிக்கப்படும் நாளாக இது அமைந்துள்ளது.


உங்கள் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சிறப்புப் பிணைப்பைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தேசிய சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் இருப்பவர்கள் உண்மையிலேயே ஆசீர்வாதம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சகோதரர்கள் உங்களின் க்ரைம் பார்ட்னராகவும், உங்களுக்கான ஆதரவாளர்களாகவும் இருப்பவர்களாக உள்ளார்கள்


சகோதரர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, நெருக்கடி மற்றும் தனிமையின் போது அவர்களின் இருப்பு ஒருவருக்கு மகத்தான நிவாரணத்தை அளிக்கும். நீங்கள் நாள்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கூட இணைப்பு இல்லாமல் இருந்து, பின்னர் மீண்டும் சந்திக்கும்போதோ அல்லது இணையும்போதோ அது மீண்டும் பழைய நினைவ ஏற்படுத்துவதுடன், உற்சாகத்தையும் தரும். வயது வித்தியாசமின்றி, 8 முதல் 80 வயது வரை என அனைத்து வயதினரும், தங்களது சகோதரனுடன் இருப்பது கவலைகள் அனைத்தையும் சிறிது நேரத்தில் மறக்க செய்து விடும்.


*தேசிய சகோதரர்கள் தினம் வரலாறு*


இந்த ஆண்டில் வெள்ளிக்கிழமை தேசிய சகோதரர்கள் தினம் வந்துள்ளது. 2005ஆம் ஆண்டு தொடங்கிய பாரம்பரியமாக இந்த நாள் இருந்து வருகிறது. இந்த நாளின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு பற்றி சிறிய தகவல்களே கிடைத்துள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகணத்தை சேர்ந்த சி. டேனியல் ரோட்ஸ் தான், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரை கொண்டாடுவதற்காக இந்த நாளை உருவாக்கிய பெருமைக்குரியவர்


*தேசிய சகோதரர்கள் தினம் முக்கியத்துவம்*


க்ரைம் பார்ட்னர், ஆதரவாளர், தனித்துவமாகப் புரிந்துகொள்ளும் நம்பிக்கையாளர் என பல்வேறு பரிணாமங்களை கொண்டவராக சகோதரர்கள் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களை அங்கீகரிக்க இந்த நாள் சிறந்த சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது. இது குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது,


நெருக்கடி மற்றும் தனிமையின் போது சகோதரர்கள் வழங்கும் ஆறுதல் மற்றும் நிவாரணத்தை நமக்கு நினைவூட்டும் விதமாக இந்த நாள் அமைகிறது. தேசிய சகோதரர்கள் தினம், சகோதர உறவை போற்றுவதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. காலத்தையும் தூரத்தையும் தாண்டிய நிலையான தோழமையைக் கொண்டாடுகிறது


🌹 *தேசிய சகோதர தின வாழ்த்துக்கள்! நீங்கள் என் சகோதரர் மட்டுமல்ல. எனது சிறந்த நண்பர் மற்றும் நம்பிக்கைக்குரியவர். அனைத்து சிறந்த நினைவுகள் இன்னும் பல வரவுள்ளன!*🌹

#Day, #life, #true, #brother, #love, #fact, #wishes

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send