BestTamilQuotes

 

டிசைன் டிசைனா யோசிச்சி ஏமாத்துறாங்க உஷாரா இருங்க.


விழிப்புணர்வு பதிவு.


தெரிஞ்சவரோட மனைவி ஒரு பெண்களுக்கான துணி கடை வெச்சு இருக்காங்க. 4 பேர் வெச்சி அவங்களே தைச்சும் கொடுக்குறங்க.


3 மாசம் முன்னாடி அவங்களுக்கு ஒரு call வந்து இருக்கு.

Call பண்ண நபர் நாங்க சீரியல் எடுத்துக்கிட்டு இருக்கோம். அடுத்த வாரம் ஒரு கல்யாண சீன் எடுக்கணும். அதுக்கு சில பெண்களுக்கு dress எடுத்து தைக்கணும் செஞ்சி கொடுப்பீங்களானு கேட்டு இருக்கார்.


இந்த லேடியும் செஞ்சி தறோம்னு சொல்லி இருக்காங்க.


சரிமா நாளைக்கு எங்க staff வந்து dress எல்லாம் select செஞ்சி கொடுப்பாங்க அதுக்கு அப்பறம் நீங்க தைக்கிறதுக்கும் சேத்து எவளோ ஆகுதுனு சொல்லுங்கனு சொல்லி இருக்கார்.


அடுத்த நாள் 2 பெண்கள் வந்து சில துணிகளை அவங்க கடையிலயே எடுத்து அளவு கொடுத்து தைக்க சொல்லி இருக்காங்க. 


மறுபடியும் அந்த நபர் call பண்ணி என்ன ஆச்சி எவளோ ஆச்சுன்னு கேட்டு இருக்கார். 70,000 ஆகுது உங்க ஆளுங்க வந்து எடுத்து தைக்க சொன்ன துணி எல்லாம்னு இந்த லேடி சொல்லி இருக்காங்க.


Okமா உங்க account details கொடுங்க நான் பணம் போடுறேன்னு சொல்லி இருக்கார். இந்த லேடியும் account details கொடுத்து இருக்கு. சார் நீங்க பணம் போட்ட பிறகு தான் சார் நாங்க தைக்க தொடங்குவோம்னு சொல்லி இருக்காங்க இந்த லேடி.

காலைல போட்டுடுவேன் அதுக்கு அப்புறம் கூட நீங்க வேலை தொடங்குங்கனு அந்த நபர் சொல்லி இருக்கார்.


அடுத்த நாள் காலைல அந்த நபர் call பண்ணி இருக்கார்.

நான் மும்பைல இருக்கேன் அங்க shootingக்கு கொஞ்சம் பணம் தேவைனு சொல்றாங்க. நான் இப்போ உங்க accountல 2,50,000ரூ போடுறேன் உங்களுக்கு சேர வேண்டிய 70,000ரூ போக மிச்சம் 1,80,000ரூ எடுத்து எங்க staff வருவாங்க எடுத்து அவங்க கிட்ட கொடுக்க முடியுமானு கேட்டு இருக்கார்.


இந்த லேடி கொஞ்சம் யோசிச்சி இருக்காங்க சரி நமக்கு ஒரு வியாபாரம் வருதேனு சரினு சொல்லி இருக்காங்க.


1 மணி நேரம் ஆச்சி 

4 மணி நேரம் ஆச்சி 

அண்ணனுக்கு நைட் வரைக்கும் accountக்கு காசு வரல. அடுத்த நாள் வரைக்கும் வெயிட் பண்ணி பாத்து இருக்காங்க காசு வரல. சரி call பண்ணி பாக்கலாம்னு call பண்ணி இருக்காங்க அந்த ஆளு நம்பர் switch offனு வந்து இருக்கு. இந்த லேடியும் அதோட விட்டுட்டாங்க ஒரு வியாபாரம் போச்சேனு.


3 நாள் கழிச்சி இந்த லேடிக்கு திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் பேசுறேன்னு call வந்து இருக்கு. 


என்ன ஆச்சின்னு இந்த லேடி கேட்டு இருக்காங்க

உங்க பேரு இதானே ? உங்க back account no இதானேனு கேட்டு இருக்காரு இன்ஸ்பெக்டர்.

ஒரு அளவுக்கு இந்த லேடிக்கு புரிஞ்சி போச்சி நமக்கு call செஞ்ச ஆளு தான் ஏதோ பிரச்சனைனு.


நாளைக்கு காலைல நீங்க திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷன் வரணும்னு சொல்லி இருக்காங்க இல்லனா உங்க ஏரியா லோக்கல் போலீஸ் உங்க வீட்டுக்கு வருவாங்கனு சொல்லி இருக்காங்க.


இந்த லேடி பதறி போயி அவங்க கணவர் கிட்ட சொல்லி கையோட ஒரு வக்கீலை கூட்டிகிட்டு போயி இருக்காங்க சென்னைல இருந்து.


வந்தா இந்த லேடியை கைது பண்ண போலீஸ் தயாரா இருந்து இருக்கு.


விஷயம் என்ன நடந்து இருக்குனா?

இந்த லேடிக்கு call செஞ்ச நபர் ஊரு ஊரா போயி பெரிய பெரிய தொழில் அதிபர்கள், நகை கடை உரிமையாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி உரிமையாளர்களை பார்த்து நான் MLA officeல இருந்து வரேன் MLA நிதி கேட்டார்னு கேக்க வேண்டியது. MLA officeல இருந்து கேக்குறாரேனு பயந்து போயி சில பேரு கொடுத்து இருக்காங்க.


அந்த மாதிரி திருநெல்வேலில ஒரு நகை கடை அதிபர் கிட்ட போயி 2,50,000ரூ கேட்டு இருக்கார் MLA கேட்டார்னு.

பணத்தை இந்த துணி கடை வெச்சி இருக்குற லேடியோட accountல போடுங்கனு சொல்லி இந்த லேடியிட account detailsயை கொடுத்து இருக்கார்.


அந்த ஆளாலோட கெட்ட நேரம் அந்த நகை கடை ஓனர்க்கு MLAவை நல்லா தெரியும் போல இருக்கு.

நேர MLAகே call பண்ணி என்ன உங்க பேரை சொல்லி ஒரு ஆளு வந்து காசு கேக்குறார்னு கேட்டு இருக்கார்.


அவளோ தான் சோலி முடிஞ்சி. MLA போலீஸ்க்கு சொல்ல இந்த account நம்பர் யாரோடாதுனு bankல கொடுத்து செக் பண்ணி இருக்காங்க இந்த லேடியோட details bankல இருந்து போலீஸ்க்கு கிடைச்சி இருக்கு.


தூக்கிட்டு வாங்க டா அந்த செல்லத்தைனு இந்த லேடி மேல பழி விழுந்துடிச்சி.


போலீசை பொறுத்த வரை இந்த லேடி தான் யாரையோ அனுப்பி பணம் வாங்க பாத்து இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க. ஏன்னா இவங்க accountல தானே பணத்தை போட சொல்லி கொடுத்து இருக்காங்க.


எல்லா விஷயத்தியும் போலீஸ் இந்த லேடி கிட்ட சொல்ல, இந்த லேடி பதறி போய் நடந்த கதை எல்லாம் போலீஸ் கிட்ட சொல்ல. ஒரு வழியா இந்த லேடி சொல்றது உண்மைனு போலீஸ் நம்பி இந்த லேடிய விட்டு இருக்காங்க.


ஆனா இந்த case விஷயமா நீங்க court வரணும் நாங்க சொல்லும் போதுனு சொல்லி அனுப்பி இருக்காங்க.


அதுக்கு அப்புறம் 20 நாள் கழிச்சு போலீஸ் ஒரு நாள் call பண்ணி 2 நாள்ல வழக்கு வருது நீங்க வந்து சாட்சி சொல்லணும்னு சொல்லி இருக்காங்க. புருஷன் பொண்டாட்டி வக்கீல் 3 பேரும் போயிட்டு வந்து இருக்காங்க.


இன்னும் 2 முறை நீங்க courtக்கு வர வேண்டி இருக்கும்னு சொல்லி அனுப்பி இருக்காங்க.


கேக்குறது இது சின்ன விஷயமா தெரியலாம் ஆனா அந்த லேடி இடத்துல இருந்து பாத்தா இது எவளோ மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் புரியும்.

எவளோ செலவு வேற,

போக்கு வரத்து, வக்கீல் செலவு, அங்க போலீஸ்க்கு செலவு.


வியாபாரம் செய்யும் பெண்கள் உஷாரா இருங்க ரூம் போட்டு யோசிக்கிறாங்க எப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு.


பகிர்வு

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send