Female Children

Female Children

 #life, #true, #update, #Children

பிள்ளைகள் பெண்ணாய்

பிறந்து விட்டதே

தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும்
நிலம் வாங்கி சேர்க்க வேண்டும்

செலவை குறைத்து
சேமித்த பணத்தை
வங்கியில் சேர்கனும் என்று
ஏங்கித் தவிக்காதீர்கள்

தூக்கம் மறந்து துவழாதீர்கள்
துக்கம் கொள்ளாதீர்கள்

நீங்கள் ஆற்ற வேண்டியது
ஒன்றே ஒன்று தான்

பெண் பிள்ளைகளுக்கு
நல்ல கல்வியைக் கொடுங்கள்

தாலி கட்டினவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது

எதையும் எதிர்த்து
ஏறி மிதித்து வாவென்று
தன்னம்பிக்கையை கொடுங்கள்

விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள்

இசை பயில நடனம் பயில
தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால்
அதற்கான வழிகளை செய்து கொடுங்கள்

இன்னொரு வீடு
இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று
சமையல் பழக்குவதை விடவும்
சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும்
தையல் பழக்குவதை விடவும்

பிரச்சனைகளின் போது
எப்படி மீள வேண்டும்
பிரிவுகளின் போது
தனித்து எப்படி வாழ வேண்டுமென்று
தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள்

அதட்ட வேண்டிய நேரம்
அதட்டி வளவுங்கள்

தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம்
தட்டிக் கொடுங்கள்

பெண்ணுக்கு அறிவை விடவும்
தங்கமோ நிலமோ பெரியதில்லை

படிப்பிருந்தால்
தங்கமும் நிலமும் பணமும்
தானாய் வந்து கதவு தட்டும்

உங்கள் வளர்ச்சியைக் கண்டு
உலகம் கைகள் தட்டும்

சிறப்புடன் வாழ
சிரிப்புடன் வாழ வைப்போம்

#life, #true, #update, #Children

Related Posts

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send