BestTamilQuotes

 

மனைவிகளுக்கு சில அறிவுரைகள்.


கணவன் வேலைக்கு சென்று பசியோடும், களைப்போடும் வீட்டிற்கு வரும் போது வீட்டுப் பிரச்சினைகள், பக்கத்து வீட்டுப் பிரச்சனைகள், குடும்ப பிரச்சினைகள் குறித்து பேசாதீர்கள்.


நொடிக்கு நொடி உங்கள் தாய், தந்தையைப் பற்றி பெருமையாகவும் அவருடைய தாய் தந்தை, குடும்பம் பற்றி குறையும் கூறிக் கொண்டே இருக்காதீர்கள் இதனால் வீண் சண்டை தான் வரும்.


உங்கள் இருவருக்குமிடைய சண்டை வந்தால் உன் தாயா சொல்லித் தந்த என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் அது மிகப் பெரும் பிரளயம் ஏற்படுத்தும். 


கணவர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தால் அது சரியில்லை, இது சரியில்லை என்று குறை கூறாதீர்கள். 


அடுத்த முறை அவர்கள் இனி நீயே போய் உனக்கு தேவையானதை வாங்கி வா என்று நழுவி விடுவார்கள். 


குடும்பச் செலவுக்காக இருந்தாலும் கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்காதீர்கள்,  சீட்டும் கட்டாதீர்கள் சில நேரங்களில் பொறுப்பு உங்கள் தலையில் விழுந்து விடும் அதனால் தேவையற்ற பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. 


கணவன் போனில் பேசினால் யார் என்ன என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள், சந்தேகப் பேச்சு பேசாதீர்கள்.


உங்கள் தேவைகளை அதிகாரமாக கேட்காதீர்கள் அன்பாக கேளுங்கள் உடனே கிடைக்கும்.


ஒரு நாள் வாங்கித் தரவில்லை என்றாலும் கூட இதுவரைக்கும் எதுவுமே வாங்கித் தரவே இல்லாததை போன்று என்ன வாங்கித் தந்து கிழித்தீர்கள் என்று சொல்லாதீர்கள். 


கணவரின் ஆடை அலங்காரங்களை ரசித்துப் பாராட்டுங்கள் மனைவியை விட்டால் ரசிக்கவும்,பாராட்டவும் அவர்களுக்கு யாரும் இல்லை.


கணவன் ரசிக்கும் விதமாக வீட்டில் ஆடை அணியுங்கள், கணவனை நெருங்கும் போது குளித்து துப்பரவாக இருங்கள், நல்ல வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள். 


கணவன் கோபப்படும் போது உங்கள் கருத்தை சொல்லி நீங்களும் கத்தாதீர்கள் (வாய்க்கு வாய் பேசாதீர்கள்.) அமைதியாக இருந்து விட்டு சரியான நேரத்தில் வலிமையாக உங்கள் கருத்தை சொல்லுங்கள் பலன் இருக்கும்.


பெண்களின் அன்பு பட்டம் போன்றது ஆண்களின் அன்பு நூல் போன்றது கண்ணுக்குத் தெரியாது நூல் அறுந்து விட்டால் வாழ்க்கை நரகமாய் விடும். 


குடும்பம் என்பது அழகான கூடு அங்கு விட்டுக் கொடுத்தல் இருந்தால் என்றும் அழியாது.

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send