Car

Car

 

நீங்கள் கார் வைத்துள்ளீர்களா.. அப்போ இந்த முக்கிய பதிவு உங்களுக்கு தான்.

நேற்று விழுப்புரத்தில் இருந்து மதுரை செல்லும் பொழுது நடுவழியில் இஞ்சின் பகுதியிலிருந்து ஒரு சிறிய சப்தம் வந்தது.. என்ன என்று பேலட் ஓபன் பண்ணி பார்த்தால் இஞ்சின் Belt ல் இருந்து தான் அந்த சத்தம்.. என்ன என்று பார்த்தால் Belt ஓரம் சிறிதளவு கட் ஆகி இருந்தது.

அருகில் எந்த மெக்கானிக் கடையும் இல்லாததால் நகர் பகுதிக்கு எப்படியாவது சென்றுவிடலாம் என்று வண்டியை எடுத்தோம்.. ஆனால் செல்வதற்கு முன்னே டேஷ் போர்டில் பேட்டரி லைட் எரிய தொடங்கியது மற்றும் ஏசியும் வேலை செய்யவில்லை. 

என்னவாக இருக்கும் என்று தெரிந்த மெக்கானிக்கிடம் கால் பண்ணி கேட்டால் உங்கள் இன்ஜின் Belt அறுந்திருக்கும் செக் பண்ணி பாருங்கள் என்று கூற பேலட் ஓப்பன் பண்ணி பார்த்தால் அதிர்ந்து போனேன்.. அங்கு பெல்ட் நூல் நூலாக அருந்து கிடந்தது. இதையும்  மெக்கானிக்கிடம் கூற வண்டியை இதற்கு மேல் ஓட்டக்கூடாது என்று கூறினார்.. காரணம் ரேடியேட்டர் வேலை செய்யாது இதனால் என்ஜின் சூடாகி பெரிய பிரச்சனை வர வாய்ப்புள்ளது என்று கூற நான் வண்டியை எடுக்கவில்லை.


பிறகு சாலையின் இருபுறமும் சுற்றி பார்க்க, எதிர் புறம் ஒரு மெக்கானிக் கடை இருந்தது அங்கு சென்று மெக்கானிக்கை அழைத்து வந்து பார்த்தபோது பெல்ட் நூல் நூலாக கிழிந்து சிக்கிக் கொண்டது. பின் அதை கத்திரிக்கோல் உதவியுடன் கட் செய்து வண்டியை மெக்கானிக் கடைக்கு எடுத்து சென்றோம். 

அங்கு மெக்கானிக் என்னிடம் கூறியது ஒவ்வொரு 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஒருமுறை பெல்ட்டை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று. 

பின் புதிய பெல்ட் மாட்டிக் கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

அன்பான நண்பர்களே உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். ஒவ்வொரு 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஒரு முறை எஞ்சின் பெல்ட் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.

#car, #life, #help, #share

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send