Life
*பிரச்சனைகளை சொல்லி வாழ்வது வாழ்க்கை அல்ல. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று சொல்லி விட்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது தான் வாழ்க்கை.*
காலம் எதையும் மறக்கடிப்பதில்லை.ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மட்டுமே தருகிறது. ஆகையால் வாழ்க்கைக்கு நெளிவு சுளிவான போக்கு அவசியம்.
*நாம் ரோபோ மனிதர்கள் இல்லையே உணர்வுகளுக்கு* *ஆட்பட்டவர்கள். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு வேண்டாமே.*
*பக்குவமாகப் பழகி சகித்துக் கொள்வோம் சக மனிதர்களை.*
தன் சூழ்நிலை அறிந்து இருக்கும் மனிதன் தான். தன்னைப் போலவே சக மனிதனுக்கும் சூழ்நிலைகள் இருக்கும் என்பதை மறந்து விடுகிறான். பிறர் உணர்வை மதித்து அன்பு மனம் போல் இருந்தால் வெற்றி நிச்சயம்.
_*சொல் ஒன்றுதான்..*_
_*சொல்லும் நபரைப் பொறுத்தும்,*_
_*சூழலைப் பொறுத்தும் கொல்கிறது அல்லது வெல்கிறது.*_
_பிறரைத் தாழ்த்தி_
_உங்களை உயர்ந்தவர் எனச் சொல்லாதீர்கள்._
_உங்கள் செயலை உயர்த்தி உங்களை உயர்ந்தவர் எனக் காட்டுங்கள்._
_*குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.*_
_*குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர்.*_
_மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது._
_சிரித்தே வாழப் பழகுங்கள் துயரங்கள் உங்களை நெருங்கப் பயப்படும்._
_*சிந்தித்து வாழப் பழகுங்கள் பொய்கள் உங்களை நெருங்கப் பயப்படும்.*_ _*அனைத்தையும் ஏற்கப் பழகுங்கள் வாழ்க்கை முழுவதும் சிறக்கும்.*_
_*யார் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து யோசித்தே பாதி ஆயுள் கரைகிறது...*_
_புறம் பேசுபவர்களுக்கு செவிடனாய் இரு!_
_*குறை சொல்பவர்களுக்கு ஊமையாய் இரு!*_
_மற்றவரை திருப்திப்படுத்தும் நாடகத்தை நிறுத்தி விடு!_
_*உன் வாழ்க்கைக்கு நீ மட்டுமே கதாநாயகன்!*_
_பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காத வாழ்வே தொல்லையில்லா சொர்க்கம்..!!_

Comments