Life

Life

ஆழ்மனதின் அற்புதமான மற்றும் அபாரமான சக்தியை அடைவதற்கு மிகச் சிறந்த உதாரணம் 50-Cent-ன் வாழ்க்கை தான்.

தனது 12-வயதிலேயே பெற்றோரை இலந்து கஞ்சா விற்று பல முறை சிறை சென்று பிளாட்பார்மில் வசித்து சில்லரைப் பையன்(50-Cent) என்று பெயர் எடுத்த ஒருவன்.

தற்போது அமேரிக்காவின் மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், நம்பர்-1 பாப் இசை பாடராகவும், பல கோடி சொத்துக்களுக்கு சொந்தக் காரராகவும் உள்ளார் என்றால் அந்த அசாத்தின் வெற்றியின் இரகசியம் தான் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஒருமுறை 50-Cent தனது நண்பனின் மெக்கானிக் கடையில் உள்ள ரேடியோவில் ஒரு பாப் பாடலைக் கேட்டார் அந்தப் பாடல் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

50-Centன் ஆர்வம் பாப் பாடல்கள் மீது அதிகமானது, அதன்மீது தீராத காதல் ஏற்ப்பட்டது. அன்றுமுதல் தானாக எதாவது ஒன்றை தன் பார்க்கும், கேட்கும் வார்த்தைகளை எல்லாம் வைத்து பாடிக்கொண்டே இருப்பார்.

மக்கள் அவரை பைத்தியம் பிடித்துவிட்டதாக கேலி செய்தனர்.

அவரின் நண்பர் மட்டும் அவருக்கு ஒரு ரேடியோ வாங்கிக் கொடுத்து தனது மெக்கானிக் செட்டில் சிறியதாக ஒரு அறையையும் கொடுத்தார்.

50-Cent அந்த அறையை விட்டு எங்குமே செல்வதில்லை பாடலைக் கேட்பது பாடுவதும் தான் அவரின் முழுநேர வேலையும்.

சில வருடங்களுக்கு பிறகு தன் நண்பன் மூலமாக ஒரு ஆல்பம் பாடலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரின் பாடலில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்தவர்கள் பாடலை வெளியிட்டனர்.

முதல் ஆல்பமே அமோக வெற்றியைப் பெற்றது. இப்போது ஜாக்ஸன்(50-Cent) பாப் பாடகர், தொழில் அதிபர், முதலீட்டாளர், தயாரிப்பாளர் என பல கோடி சொத்துக்களின் சொந்தக்காரர்.

#ஆர்வம் உங்கள் ஆழ்மன சக்தியை அதிகரிக்க வைக்கவும், ஈர்ப்புவிதியை பயன்படுத்தவும் சிறந்த ஊடமாக செயல்படும்



Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send