Success-life
டென்ஷனுக்குக் காரணங்கள்.
டென்ஷனுக்கு உண்டான காரணங்களை அறிவதற்கு முன் மனிதர்களை அவர்களின் மனநிலையைப் பொறுத்து இருவகையாகப் பிரிக்கலாம்.
A வகை மனநிலை உடையோர்,
B வகை மனநிலை உடையோர் என இரு வகையினர் உண்டு .
A வகை மனநிலை உடையவர் எதிலும் கச்சிதமாக இருக்க விரும்புவர். அனாவசியமாக நேரத்தை செலவழிக்க மாட்டார்கள். தாங்கள் சாதிக்க நினைத்ததை மட்டுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். மேலும் பரபரப்பாக இருப்பார்கள். எதிலும் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டவாறே நடக்க வேண்டும் என்று அதை நிறைவேற்றத் தேவையானவற்றை செய்து கொண்டிருப்பார்கள். எதையும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் அவர்களின் சிந்தனை எப்போதும் நியாயத்தையும் நேர்மையையும் கொண்டதாக இருக்கும். மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமோ அழிக்கும் எண்ணமோ இல்லாதவராய் இருப்பார்கள்.
B வகை மனநிலை உடையோரும் எதையும் மிக நேர்த்தியாக செய்ய வேண்டும் என எண்ணமே இல்லாதவராக இருப்பார்.ஏனோ தானோ என இருப்பர். எதனையும் ஒரு கால அட்டவணைப்படி செய்து முடிக்கும் எண்ணம் இல்லாது இருப்பவர். எதனையும் ஒரு காலக்கெடுவுக்குள் அடைந்தே தீரவேண்டும் எனும் இலக்கும் இல்லாதவராய் இருப்பர். அவர்களின் சிந்தனை சிலசமயம் நேர்மைக்கும் நியாயத்திற்கும் புறம்பானவை கூட இருக்கும். இவர்களிடம் பரபரப்பு சுறுசுறுப்பு எதுவும் இருக்காது. நடப்பது எல்லாம் நல்லதற்கே எனும் சிந்தனையே மேலோங்கி இருப்பவராக இருப்பர். எதனையும் அடைந்தே தீரவேண்டும் எனும் குன்றியவராக இருப்பார்.
A வகை மனநிலையில் இருப்பவரால் தான் இந்த டென்ஷன் அதிகமாக தொற்றிக் கொள்ளும். ஏனெனில், அவர்கள் Perfectionist இருக்க விரும்புவதால் எப்போதும் டென்ஷனாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் தான் எதிலும் டென்ஷன் எங்கும் டென்ஷன் என்று இருப்பார்கள் .இந்த மனநிலை உடையவர்களுக்கு மற்றொரு அடைமொழியும் உண்டு அதன் டென்சன் பேர்வழி என்பதாம்.
புதியதாய் இவர்களை பார்ப்பவர்கள் இவர்களின் இறுக்கமான மன நிலையினைப் புரிந்து கொள்வது சில சமயங்களில் சிரமமாக இருக்கும். அடிக்கடி பார்ப்பவர்கள் மன அழுத்தம் அதிகம் இருப்பதை உணர்வார்கள்.
வாழ்க்கை பல வண்ணங்கள் போன்று அவை நல்ல எண்ணங்களோடு பயணிக்கட்டும். வாழ்க்கை சிறக்கட்டும்.
உற்சாகத்தோடு ஒவ்வொரு வேலையும் செய்வோம். யார் பாராட்டினால் என்ன? யாருக்கு விருது தந்தால் என்ன? நாம் நம் வேலையை செய்வோம். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று.
ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அனைவரின் இலக்கும் ஒருநாள் நிச்சயம் வெற்றியை வெல்லும் என்று.
தோல்வி நமது நண்பன், ஜெயிக்கும் வரை
வெற்றி நமது எதிரி நாம் தோற்கும் வரை.
Failure is our friend, Till Success
Success is our Enemy, Till failure
😊😊😊

Comments