Golden Memories

Golden Memories



80/90களில் பிறந்தவர்கள் அனுபவித்த அண்ட புளுகுகள்; 😜🤣

#GoldenMemories, #Golden #Memories

இடி விழுகும் போது மூத்த புள்ள வெளியே  போககூடாது😀

வீட்டுக்கு வெளிய வேப்பிலைய வச்சா பேய் வராது😌😌

மழ பெய்யும் போது வெயில் அடிச்சா காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம்😀

பெளர்ணமி அன்னிக்கி நாகபாம்பு மாணிக்கம் கக்கும் அத  ஒரு வெள்ளை துணில எடுத்து வெச்சு கிட்டா கேகறது கிடைக்கும்.

நல்லபாம்பு போட்டா எடுத்தா 20வருஷமானாலும் மறக்காம கொத்துமாம்

பப்பிளிகாம்ம முழுங்குனா செத்திடுவோம்

காக்கா குளிச்ச தண்ணில முகம் கழுவுனா கண் கட்டி போயிடும்;

இரண்டு சுழி இருந்தா இரண்டு பொண்டாட்டி😒

டிவி -ல நியூஸ் வாசிக்கிற 2 பேரும் புருஷன் பொண்டாட்டி னு..

Evil dead படம் தனியா
தியேட்டர்ல் பார்த்தா
பணம் தருவாங்க
இதுவரை பார்த்தவங்க
எல்லாம் ஹார்ட் அட்டாக்ல செத்துட்டாங்க

அரிசி திங்காதடா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்

தண்ணில பென்சில சீவி போட்டா அழி லப்பர் ஈசியா செய்யலாம்

தண்டவாளத்துல காச வச்சம்னா ரயிலு ஏத்துனதும் அது காந்தமா மாறிடும்..



பறக்கிற கொக்க பாத்து
கொக்கு கையில வெள்ள போடு சொன்னா கையில வெள்ள போடும் ☺☺

 ஆறு மணிக்கு மேல விசில் ஊதுனா பாம்பு வந்துருமாம் 😓😓

Undertaker நேத்திக்கு
செத்துபோயிட்டான் !
அவனுக்கு மொத்தம்
7 உயிர் இருக்கு …
😂😂😂😂

சாணில இடி விழுந்தா அந்த சாணி எல்லாம் தங்கமா மாறிடும்😂😂😂

"ரப்பரின் நீல கலர் பக்கம் இருக்கிறது பேனா -ல எழுதுனா அழிக்கிறதுக்கு... வெள்ளை கலர் பென்சில்ல  எழுதுனத அழிக்க  😂
கொய்யால ஒரு நாளும் அழிஞ்சதில்ல.. பேப்பர் கிழிஞ்சது தான் மிச்சம் "

டேய் தோள்லந்து கைய எடுடா அப்புறம் வளர மாட்டேன்.!

ஜெயலலிதா சம்பளம் ஒரு ரூவாய் 🤔🙄

ரெட்டை வாழைப்பழம் 🍌 சாப்டுவமா ? வேணாமா ? ஆத்தி வேண்டாம் அப்பறம் ரெட்டை புள்ள பொறக்கும்;

ரெட்டை சுழி இருந்தா ரெண்டு பொண்டாட்டி 😂 சில ஊர்ல ரெட்டை சுழி இருந்தா ரொம்ப சேட்டை பண்ணுவாங்க 🤣

நகத்தை வெட்டி வீட்டுக்குள்ள போடாதடா வீடு வெளங்காம போயிடும்; 😜

பொழுது போனதுக்கு அப்ரம்..
விசிலடிக்காத... வீட்டுக்குள்ள பாம்பு வரும்... 🐍

பச்சை பாம்பு பறந்த வந்து கொத்தும்; 🐍

 தேன்ன நக்கிட்டு மண்டையில் தடவுனா முடி நரைச்சு போகும்😂😂

 மயில் இறகை புக்ல வச்சா குட்டி போடும்😂😂😂

வீட்டு வாசல்ல காக்கா கத்துனா வீட்டுக்கு விருந்தாளி வருவங்க

பல் விழுந்தா சாணில போட்டு ஓட்டு மேல எறிஞ்சா உடனே பல்லு முளைக்கும் 😫

#Golden Memories 😘😘😍😍😍😍

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send