Voter ID Card Online
*வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*
📫 _ஆன் லைனில் அனைத்தும்_
*புதிதாக வாக்களர் அட்டை பெற*
*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*
*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
Home > Login > Register. Mobile No. +91. Captcha Captcha. Send OTP. I have EPIC number. I don't have EPIC number. First Name. Last Name. Epic Number.
தேர்தல் ஆணையம் (EC) புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை மின்னணு வடிவத்தில் மாற்ற ஆர்வமாக உள்ளது. அதாவது, விமான பயணத்தின் போது, காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மிண்ணனு மூலம் காண்பிக்கும் இ- போர்டிங் பாஸ் போன்ற ஒரு முறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்த விரும்புகிறது.
தேர்தலின்போது வாக்குச்சாவடியில் வாக்காளர்களை அடையாளம் காணவேண்டியது கட்டாயமாகும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் புகைப்பட வாக்காளர்கள் அடையாள அட்டை மூலம் அடையாளம் காணப்படுவார்கள். எனவே, வாக்காளார்கள் தங்கள் அடையாள அட்டையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வது முக்கியமாகும்.
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆதார், டிரைவிங் லைசன்ஸ் போன்ற மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தைக் காட்டலாம்.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பெறுவது?
இந்த வசதியைப் பெற, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்பதற்கான விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட்ட செல்பேசி எண் (அ) மின்னஞ்சல் முகவரியை வாக்காளார் பதிவு அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவுடன், செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் அனுப்பிவைக்கப்படும். பின்னர், புதிய வாக்காளர் அட்டையை OTP (ஒன் டைம் கடவுச்சொல்) அங்கீகாரம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
தற்போது அடையாள அட்டை வைத்திருக்கும் வாக்காளர்கள், வாக்காளார் பதிவு அதிகாரியிடம் தங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் (கேஒய்சி செயல்முறை போன்று) மின்னணு வடிவத்தில் தங்கள் அடையாள அட்டையைப் பெற மின்னஞ்சல் அல்லது மொபைல் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும்.
டிஜிட்டல் வாக்காளர் அட்டை எப்படி இருக்கும்?
டிஜிட்டல் வாக்காளர் அட்டை , பெரும்பாலும் பிடிஎஃப் (PDF) கோப்பு வடிவமைப்பில் கிடைக்கும். மேலும், கணினி/மடிக்கணினி அல்லது செல்பேசி என எந்த சாதனங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஜிட்டல் நகலில் உடனடி தகவல் சேவைக்கான குறியீடு (QR Coding) இருக்கலாம் என்று கூறப்படுகிறது.வாக்காளரின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற பதிவு விவரங்களைக் குறியீட்டாக்கம் கொண்டிருக்கும்.
இத்தகைய முன்மொழிவை தேர்தல் ஆணையம் ஏன் கருதுகிறது?
தற்போதுள்ள புகைப்பட அடையாள அட்டை காகிதங்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கான செலவுகளை மிச்சப்படுத்த மின்னணு அட்டை உதவும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இது, வாக்காளர்களும் அதிகப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.
எப்போது அறிமுகமாகும்?
தற்போது, முன்மொழியப்பட்டுள்ள இந்த யோசனையை, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமாரை ஆகியோர் முறைப்படி இதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் இது பரிசீலிக்கப்படலாம். மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவை 2021 கோடைக் கால தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் அல்லது மடிக்கணினி மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.
.....................➖
#Voter_ID Card_Online, link_voter ID, #VOTER_ID, #வாக்களர் அட்டை
Good idea.
ReplyDeleteThank you
Delete