Tamil-word
*நாளும் நம்தமிழை*
*நாம் தெளிவோம்.*
*வணக்கம் எம் உறவுகளே.*
*அயல் மொழிச் சொற்களுக்கான*
*தமிழ்ச் சொற்கள்*
*தமிழ்ச் சொற்கள் போலவே நாளும் நாம் பயன் படுத்தும்*
*பல அயல் மொழிச் சொற்களுக்கு*
*இணையான தமிழ்ச் சொற்கள்*
*அகங்காரம் - செருக்கு*
*அக்கிரமம் - முறைகேடு*
*அசலம் - உறுப்பு, மலை*
*அசூயை - பொறாமை*
*அதிபர் - தலைவர்*
*அதிருப்தி - மனக்குறை*
*அதிருஷ்டம் - ஆகூழ், தற்போது*
*அத்தியாவசியம் - இன்றியமையாதது*
*அநாவசியம் - வேண்டாதது*
*அநேகம் - பல*
*அந்தரங்கம் - மறைபொருள்*
*அபகரி - பறி, கைப்பற்று*
*அபாயம் - இடர்*
*அபிப்ராயம் - கருத்து*
*அபிஷேகம் - திருமுழுக்கு*
*அபூர்வம் - அரிது, அரிய*
*அமிசம் - கூறுபாடு*
*அயோக்கியன் - நேர்மையற்றவன்*
*அர்த்தநாரி - உமைபாகன்*
*அர்த்த புஷ்டியுள்ள - பொருள் செறிந்த*
*அர்த்தம் - பொருள்*
*அர்த்த ஜாமம் - நள்ளிரவு*
*அர்ப்பணம் - படையல்*
*அலங்காரம் - ஒப்பனை*
*அலட்சியம் - புறக்கணிப்பு*
*அவசரமாக - உடனடியாக, விரைவாக*
*அவஸ்தை - நிலை, தொல்லை*
*அற்பமான - கீழான, சிறிய*
*அற்புதம் - புதுமை*
*அனுபவம் - பட்டறிவு*
*அனுமதி - இசைவு*
*இனி மேல் நாம்*
*நாளும் பேசி வரும் சொற்களில்*
*மொழி கலப்பு இல்லாமல்.*
*பேச முயற்சி எடுப்போம்.*
*நன்றி எம் உறவுகளே.*
*நாளும் தொடர்வோம்.*
#tamil, #knowledge, #data, #share, #update
Comments