Wife tips

Wife tips

 

#மனைவிகளுக்கு சில அறிவுரைகள் 


* கணவரிடம் எந்த வேலையாவது சொன்னால் அதில் குறை கூறாதீர்கள். அவர்கள் நீயே செய்துகொள் என்று நழுவி விடுவார்கள். சொத்தை கத்தரிக்காய்,முற்றிய வெண்டைக்காய் வாங்கிவந்தாலும் வாய் திறக்காதீர்கள்.நாளடைவில் நல்லதை தேர்ந்தெடுக்க பழகிடுவார்கள்.


* பசியோடு இருக்கும் போது உங்கள் கோரிக்கைகளை வைக்காதீர்கள் நிராகரிக்கப்படும்.


* நொடிக்கு நொடி அம்மாவீட்டு பெருமையை பேசாதீர்கள்.நொய்நொய்ன்னு மாமியார் வீட்டைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்காதீர்கள். வீண் சண்டை தான் வரும்.


* குடும்பச் செலவுக்காக இருந்தாலும் கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்காதீர்கள்.சில நேரங்களில் பொறுப்பு உங்கள் தலையில் விழுந்துவிடும்.


* போன் பேசினால் யார் என்ன என்று கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். தும்பு உங்களிடம் இருக்கிறது.தைரியமாக இருங்கள்.


* உங்கள் தேவைகளை அதிகாரமாக கேட்காதீர்கள் அன்பாக கேளுங்கள் உடனே கிடைக்கும்.


* கணவரின் ஆடைஅலங்காரங்களை ரசித்துப் பாராட்டுங்கள்.மனைவியை விட்டால் ரசிக்கவும்,பாராட்டவும் அவர்களுக்கு யாரும் இல்லை.


* கணவன் கோபப்படும் போது உங்கள் கருத்தை சொல்லி நீங்களும் கத்தாதீர்கள்.அமைதியாக இருந்து விட்டு சரியான நேரத்தில் வலிமையாக உங்கள் கருத்தை சொல்லுங்கள் பலன் இருக்கும்.


பெண்களின் அன்பு பட்டம் போன்றது.ஆண்களின் அன்பு நூல் போன்றது கண்ணுக்குத் தெரியாது.


குடும்பம் என்பது அழகான,கூடு. அங்கு விட்டுக் கொடுத்தல் இருந்தால் என்றும் அழியாது........

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send