Pan-card-update-tamil
புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!
புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!
பழைய பான் அட்டையை மேம்படுத்தி, டிஜிட்டலாக நவீன பான் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
விளம்பரம்
உங்ககிட்ட பான் கார்டு இருக்கா? அப்போ இந்த விவரங்களை தெரிஞ்சுக்கோங்க...
பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் அட்டை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனை பெறுவது எப்படி? இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டை பான் கார்டு. வருமான வரி செலுத்துவதற்கு மட்டுமின்றி, வங்கிகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் எடுப்பதற்கு, பண பரிமாற்றத்திற்கு என நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு பான் அட்டை அவசியம். ஒரு நபர், ஒரு பான் அட்டை மட்டும் வைத்திருக்க முடியும் நிலையில், நவீன வசதிகளுடன் கூடிய பான் 2.0 அட்டை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பான் 2.0 அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பான் அட்டையில் கியூஆர் கோடு இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பான் அட்டையில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு உள்ளது. இதனை கியூஆர் கோடாக மாற்றுவதன் மூலம், வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
விளம்பரம்
மேலும், எளிதாக அணுகி விரைவான சேவையை பெறுதல், உண்மைத்தன்மையின் ஒற்றை ஆதாரம் மற்றும் தரவுகளின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, செலவினம் குறைப்பு என பல்வேறு பயன்கள் இருப்பதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கு ரூ.1,435 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பழைய பான் அட்டையை மேம்படுத்தி, டிஜிட்டலாக நவீன பான் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதிய பான் அட்டை குறித்த சந்தேகங்களுக்கு பதில் இதோ..!
1. புதிய பான் கார்டு வாங்கினால், பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா?
பதில்: உங்களுடைய பான் எண் மாறாததால், அதை பற்றி வாடிக்கையாளர்கள் கவலையடைய தேவையில்லை என மத்திய அமைச்சர் விளம்மளித்துள்ளார்.
2. உங்களுக்கு புதிய பான் அட்டை வழங்கப்படுமா?
ஆம். உங்களுக்கு இலவசமாக பான் அட்டை வழங்கப்படும். ஆனால் இது முற்றிலும் இலவச சேவை என்பதால், வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
3. புதிய பான் அட்டையில் என்ன மாற்றம் இருக்கும்?
பதில்:
தற்போதுள்ள பான் கார்டுகளில் உள்ள எண்களுக்கு பதிலாக, புதிய பான் கார்டுகளில் க்யூ.ஆர்.கோடு இருக்கும்.
4. நாடு முழுவதும் எத்தனை பான் கார்டுகள் உள்ளது?
நாடு முழுவதும் தற்போது 78 கோடி பான் கார்டுகள் அமலில் உள்ளது. அவற்றில் 98% பான் கார்டுகள் தனி நபர்களுடையது.
5. புதிய பான் கார்டுகளை எங்கே பெறுவது?
புதிய பான் கார்டுகள் உங்களுக்கு இலவசமாகவே டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
#pan, #card, #pan_card, #update, #latest, #news
How to buy a new pan card? Procedures for that
ReplyDelete