Motivation
வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில்?
உழைப்பின் மேன்மை தொிந்து கடுமையாக உழைத்தால் வெற்றித் திருமகள் வீடு தேடி வரும் வாய்ப்புகள் ஏராளம்.
* 🌹🌹🌹வாழநினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில், கவிஞர் எழுதியது. அது உண்மை தான்! பலர் எனக்கு வாழ்க்கையே அலுத்துவிட்டது, வாழவழியே தொியவில்லை? நான் அதிா்ஷ்டம் இல்லாதவன்! எனக்குமட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது! இப்படி பல்வேறு நிலைகளில் புலம்புவாா்கள். அதிா்ஷ்டம் வரும்தான், ஆனால் உழைக்காமல் எதுவும் வராதே! உழைப்பின் மேன்மை தொிந்து கடுமையாக உழைத்தால் வெற்றித் திருமகள் வீடு தேடி வரும் வாய்ப்புகளே ஏராளம், ஏராளம். அதை விடுத்து உழைப்பை முன்னிருத்தாமல் அதிா்ஷ்டம் வரவில்லை என்றால் அது வரவே வராது! " உழைப்பவரே உயர்ந்தவர்" என்பதை மறப்பது நல்லதல்ல. எங்கும் எதிலும் நமக்கு பணிவு வேண்டும். இதைத்தான் அாிஸ்டாட்டில் என்ற அறிஞர் ‘கட்டளை இட விரும்பினால் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டுமென்று’ சொல்லியிருக்கிறாா் .
அதன்படி நம்மிடம் பணிவு உள்ளதா? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்வதே நல்லது. யாராக இருந்தாலும் மதிக்கக்கற்றுக்கொண்டால் நமக்கு நல்லதே துணையாய் வந்து நம் வீட்டு வாசற் படியைத்தாண்டி வரும்.
உழைக்காமல் வருவது எதுவுமே ஒட்டாது. அது நிலைக்காது. சோம்பலாக சோம்பிக்கிடந்தால் நம்மீது சிலந்தி கூட கூடுகட்ட இடம் தேடுமே. நமது செயல்களை சிலர் விமர்சனம் செய்வதுண்டு. பொிய படிப்பு படித்து விட்டு சுமாா் வேலையில் உள்ளான். வெளிநாடு சென்றால் கூட லட்சக்கணக்கில் வருமானம் பாா்க்கலாமே என பலர் சொல்வது நிஜம். அதே நேரம் அறிஞர் அாிஸ்டாட்டில் சொல்லிய கருத்தைப் பாருங்கள்.
"விமர்சனம் செய்பவனே நண்பன், கூழைக்கும்பிடு போடுபவனே முதல் எதிாி" எனக்கூறியுள்ளாா். வாழ்க்கையின் எதாா்த்தம் புாிந்து விமர்சனங்களைக் கடந்து நோ்மறை ஆற்றலோடு உழைப்பின் மேன்மை மற்றும் தன்மை அறிந்து செயல்பட்டால் வாழ்க்கையில் வசந்தம் தானாகவே வெண்சாமரம் வீசி வருமே!
அதே போல சோம்பலைத் தவிா்த்தாலே அனைத்தும் சரியாகிவிடும். சோம்பல்தான் நமக்கு முதல் எதிாி, அன்றைய வேலைகளை அன்றைய தினமே செய்யவேண்டும், ஒத்திப்போடுவது நல்லதல்ல. இதை வலியுறுத்தியே அறிஞர் ஆபிரகாம் லிங்கன் சொல்லிய கருத்தைப் பாருங்கள். "நாளைய தினம் இந்த வேலையைச் செய்யப்போகிறேன் என்று நினைத்து இன்று செய்ய முடிந்தவைகளை ஒத்திப்போடாதீா்கள்". இந்த வாக்கியங்கள் எவ்வளவு உன்னதமாது என்பதைப் பாருங்கள், அதை கடைபிடிப்பது நல்லதே !
அதே போல ஒரு வேலையைச்செய்யும் போது பலர் பலவிதமாக நமக்கு எதிா்மறையான கருத்துக்கைச் சொல்வதும் இயல்புதான்! இது நடைமுறைதான்! அதே நேரம் நாம் வாழ்க்கையில் சாதனை ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு சாதிக்கத் துணியவேண்டும். இதில் நமக்கு தேவை நோ்மறை சிந்தனையே துணையாய் வரும். இதைத்தான் விவேகானந்தர், ‘பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். அவையாவன ஏளனம், எதிா்ப்பு, அங்கீகாரம்’, இதை எதிா்கொண்டாலே வெற்றி நிச்சயம் தான், இப்படி ஒரு காாியத்தைச் செய்யும் போது அதில் தோல்வி கண்டால் ஏளனம் செய்து எள்ளி நகையாடும் உலகமிது .
அவைகளை நாம் நமது பக்குவமான செயல்பாடுகளால் ஏளனம் கண்டு துவளக்கூடாது. அதே நேரம் சில சமயங்களில் எதிா்ப்புகள் கூட வரலாம். அதையும் நாம் சமயோசிதமான புத்தியைக்கொண்டு சமாளிக்க வேண்டும். அதேபோல நமது செயல்பாடுகளுக்குாிய அங்கீகாரம் கிடைத்தாலே வெற்றி நம்மைத்தேடி வரும்.
பொதுவாகவே வெற்றி பெற அதிர்ஷ்டம் மட்டுமே துணையாகாது. அதற்கு கடின உழைப்பே நமக்கு கைகொடுக்கும். ஆகவே கிடைத்த வேலையில் சோ்ந்து உண்மையை கடைபிடித்து நோ்மையோடு வாழ்வதே சிறந்த வெற்றியைத்தரும். நம்மால் முடியும் என்ற அதீதமான நம்பிக்கையோடு வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நோ்மறை சிந்தனையோடு உழைப்பின் தன்மை அறிந்து செயல்பட்டால் போதும் வெற்றிகளைத் தங்கு தடையில்லாமல் அறுவடை செய்யலாம்.
Comments