Appa

Appa


 🌺தன் மகளை அளவுக்கு அதிகமாக 

நேசிக்கும் ஒரு தகப்பன்.


🌺தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று..


🌺ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்..


🌺ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்..


🌺பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா?? என கேட்டார்..🐝 


🌺மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்..


🌺அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...


🌺அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...


🌺இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...ஷ...ரு


இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!


🌺ஆம் அன்பான  பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...


🌺எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!


🌺அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send