UPI ₹2,000க்கு மேல் Payment – Customer-க்கு Charge வருமா? முழு விளக்கம்!

UPI ₹2,000க்கு மேல் Payment – Customer-க்கு Charge வருமா? முழு விளக்கம்!

 

UPI MDR Charges Explained – October 15 Update

வலைதளப் பதிவு பகிர்வு 

🚨 UPI-ல ₹2,000க்கு மேல Payment பண்ணினா இனிமே Charge வருமா?

October 15 முதல் UPI transactions-க்கு புதிய charges வரப்போகிறது என்ற செய்தியைப் பார்த்ததும்…
“அடப்பாவிகளா… UPI-க்கும் Charge கொண்டு வந்துட்டாங்களா?” 😄 என்று நினைக்காதீங்க.

மேட்டர் அது இல்லை.

முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கோங்க.

👉 நீங்க ஒரு Customer ஆ UPI மூலம் Payment பண்ணுவதற்கு எந்த Charge-மும் கிடையாது.
புதுசா வந்துருக்குறது MDR – Merchant Discount Rate.

அதாவது சில UPI payments க்கு Merchant / Business தான் இந்த charge-ஐ கட்ட வேண்டும். Customer அல்ல.


சரி… என்ன மாறப்போகுது?

👨‍👩‍👧 ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் அனுப்புறீங்களா?

நண்பருக்கு ₹5,000 அனுப்புறீங்க.
மனைவிக்கு ₹20,000 அனுப்புறீங்க.
உங்களுடைய இன்னொரு Bank Account க்கு ₹50,000 transfer பண்ணுறீங்க.

அதுக்கெல்லாம் Charge ₹0.

இதுக்கு பேரு Person-to-Person (P2P) transaction.
Amount எவ்வளவாக இருந்தாலும், permitted limits-க்குள் உள்ள P2P UPI transfer தொடர்ந்து free.


🛒 Shop / Business-க்கு Payment?

இங்கதான் மாற்றம் வருகிறது.

Normal Merchant UPI transaction ₹2,000க்கு மேல் இருந்தால்: MDR = 0.4%

உதாரணமா:

  • ₹3,000 Payment → MDR ₹12
  • ₹50,000 Payment → MDR ₹200

₹75,000 மற்றும் அதற்கு மேல் என்றால் — Maximum MDR = ₹300.

₹1 லட்சம் payment பண்ணினாலும் 0.4% கணக்கில் ₹400 வராது.
Maximum ₹300 மட்டுமே.

ஆனா மறுபடியும் சொல்றேன்…
இந்த பணத்தை Customer கொடுக்க வேண்டியதில்லை.
Merchant தான் செலுத்த வேண்டும்.
Merchant இதை Customer மேல தனியா UPI charge என்று போடவும் முடியாது.


Read more...


🥬 சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்?

இதுவும் முக்கியம்.

P2PM category-ல இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection-ல தொடர்கிறார்கள்.

அதனால், ₹2,001 payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் charge என்று புரிஞ்சிக்காதீங்க.

அப்படி கிடையாது.


📈 Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்?

இதுக்கு தனி rate.

Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு:

  • MDR = 0.02%
  • Maximum: ₹300 per transaction

இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR.
இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund-ஓட expense ratio-ல include ஆயிடும்.
Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும்.


💰 அப்போ SIP AutoPay க்கெல்லாம்?

இங்க ஒரு நல்ல செய்தி.

UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments — SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது.

அதாவது உங்கள் monthly SIP AutoPay-ல இந்த சார்ஜ் வரவே வராது.


🚆 Insurance, Fuel போன்ற Payments?

Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories-க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது.

இதுக்கு Flat ₹5 MDR charge பண்ணுவாங்க.

Public utilities போன்ற designated categories-க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும்.
இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல.


📱 Google Pay / PhonePe மாதிரி UPI Apps தனியா Platform Fee போடலாமா?

இந்த framework-ன் கீழ் UPI App providers, UPI payment-க்கு Platform Fee அல்லது வேறு payment charge போடக்கூடாது.


📅 இது எப்போலேர்ந்து பழக்கத்துக்கு வரும்?

இந்த புதிய MDR framework:

15 October 2026 முதல் அமலுக்கு வருகிறது.


🤔 அப்ப நமக்கு என்ன மாற்றம்?

நீங்க ஒரு சாதாரண UPI User என்றால்… பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

  • Friend-க்கு Money Transfer → FREE ✅
  • Family-க்கு Money Transfer → FREE ✅
  • Shop-ல் QR Scan செய்து Payment → Customer-க்கு FREE ✅
  • SIP via UPI AutoPay → prescribed MDR இல்லை ✅
  • ₹2,000க்கு மேல் Merchant Payment → Customer-க்கு Charge இல்லை ✅

முக்கியமான விஷயம்…

News headline:
“UPI payments above ₹2,000 will be charged.”

இதை மட்டும் படிச்சா, ₹5,000 UPI பண்ணினா account-லிருந்து extra charge போயிடுமா? ன்னு நினைக்கலாம்.

அதுதான் இல்லை.

சரியான புரிதல்:
Selected Merchant UPI transactions above ₹2,000க்கு MDR வருகிறது.
அதையும் Customer அல்ல, Merchant தான் செலுத்துகிறார்.

அதனால் October 15க்கு பிறகு ₹2,001 UPI Payment பண்ணும்போது…
“ஐயையோ… charge போயிடுமோ!” என்று பயப்பட வேண்டாம் மக்களே!!!



கருத்துகள்

bing

Microsoft

Bing

FB

Archive

தொடர்பு படிவம்

அனுப்பு